எட்வர்டு விட்டென்

(கணித மேதை எட்வர் விட்டென் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எட்வர்டு விட்டன் (Edward Witten) (பிறப்பு:ஆகத்து 26, 1951) ஒரு அமெரிக்க கணிதவியலாளரும் கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவர் பிரின்ஸ்டன், நியூ ஜெர்சியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்சுடு ஸ்டடீஸ் நிறுவனத்தில் இயற்கை அறிவியல் பள்ளியில் தகைமைப் பேராசிரியர் ஆவார்.[1] இவர் சரக் கோட்பாடு, குவாண்டம் ஈர்ப்பியல், மீச்சமச்சீர்மை குவாண்டம் புலக்கோட்பாடுகள் மற்றும் இதர கணிதவியல் இயற்பியல் பகுதிகளில் ஆய்வாளரும் ஆவார். மேலும், விட்டனின் பணிகள் தனியான கணிதத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.[2] 1990 ஆம் ஆண்டில் இவர் பன்னாட்டு கணித ஒன்றியத்தால் பீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்ட முதல் இயற்பியலாளரானார். 1981 ஆம் ஆண்டில் பொதுச் சார்புக் கோட்பாட்டில் நேர்மின் ஆற்றல் கோட்பாட்டின் நிரூபணம் குறித்த இவரது பணிக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3] இவர் எம்-கோட்பாட்டின் நடைமுறை நிறுவனராகவும் கருதப்படுகிறார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Edward Witten". Institute for Advanced Study. பார்க்கப்பட்ட நாள் Jul 14, 2022.
  2. (1990) "On the Work of Edward Witten". {{{booktitle}}}, 31–35. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-03-01. பார்க்கப்பட்ட நாள் 2022-07-30.
  3. Michael Atiyah. "On the Work of Edward Witten" (PDF). Mathunion.org. Archived from the original (PDF) on March 1, 2017. பார்க்கப்பட்ட நாள் March 31, 2017.
  4. Duff 1998, p. 65
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்டு_விட்டென்&oldid=3730980" இலிருந்து மீள்விக்கப்பட்டது