கணினி வலையமைப்பு

(கணினி வலையமைப்பியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கணினி வலையமைப்பு (Computer network) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தகவல் அல்லது தரவுகளைப் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் ஒரு வலை அமைப்பு ஆகும். கணினி வலையமைப்பை கம்பி வலையமைப்பு (Wired Network) அல்லது கம்பியற்ற(மின்காந்த அலை) வலையமைப்பு(Wireless Network) என்று மேலோட்டமாக இரு வகையாகப் பிரிக்கலாம். வலையமைப்புகளை பல பிரிவுகளில் வகைப் படுத்தலாம். கீழே அந்த பிரிவுகளைக் காணலாம்.

வலையமைப்பின் வரலாறுதொகு

கணிணி வலையமைப்பு தன்னிறைவு பெறுவதற்கு முன் தகவல்களை கணினி அல்லது கணக்கீடு எந்திரங்களின் இடையே பரிமாற்ற மனிதப்பயனர்களின் உதவி தேவையாய் இருந்தது. இன்று தகவல்களை கணினி அமைப்பின் இடையே பரிமாற்றம் செய்ய வலையமைப்பு பயன்படுத்தப்படுகின்றது.

வலையமைப்பு வகைகள் - Palakkottaiதொகு

வலையமைப்பு அமைந்திருக்கும் பரப்பின் படிதொகு

வலையமைப்பின் செயல்தன்மைப் படி. Muttyதொகு

வலையமைப்பு இணைப்பு முறைப் படிதொகு

வலையமைப்பின் சிறப்புத் தன்மையின் படிதொகு

இணைப்பு நெறிமுறை அடுக்குகள்தொகு

கணினி வலையமைப்புக்களை செயல்படுத்த பலவகை நெறிமுறை அடுக்கு (Protocol Stack) கட்டமைப்புகளும், ஊடகங்களும் (Media) நடப்பில் உள்ளன. ஒரு கணினி வலையமைப்பை ஒன்று அல்லது பல ஊடகங்களையும், நெறிமுறை அடுக்குகளையும் இணைந்து செயல் படச் செய்து வடிவமைக்கலாம். உதாரணத்திற்குச் சில:

திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் (OSI Model)தொகு

பலவகை இயக்க மென்பொருள் அமைப்புகளும் (Operating Systems), வலையமைப்பிற்கான வன்பொருள் அமைப்புகளும் (Networking Hardware), நெறிமுறை அடுக்குகளும் பல்கிப் பெருகி விட்ட கணினி உலகில், கணினிகள் மற்றும் அவற்றில் இயங்கும் மென்பொருட்களை வடிவமைப்போர் சக கணினியுடன் இணைப்பு பெறும் முறை, அக் கணினியின் வன்பொருள் அமைப்பு, அதன் இயக்க மென்பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தனித்தன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தேவையில்லாமல் மென்பொருட்களை வடிவமைக்க வகை செய்யவே இந்தப் படிமம் வடிவமைக்கப்பட்டது.

இந்தப் படிமத்தின் முக்கிய நோக்கங்கள்:

  • ஒரு கணினி சக கணினியுடன் தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்துச் செயல்பாடுகளையும் (எந்த ஒரு குறிப்பிட்ட வன்பொருளையோ அல்லது மென்பொருளையோ சாராமல்) கண்டறிவது
  • அவற்றை ஏழு தேர்ந்தெடுத்த கட்டங்களில் வகைப் படுத்தித் தொகுப்பது
  • ஏழு கட்டங்களில் எந்த ஒரு கட்டச் செயல்பாடுகளும் சக கணினியிலுள்ள அதற்கு இணையான கட்டத்துடன் தொடர்பு கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நெறிமுறைப் படி தரவுப் பறிமாற்றம் செய்ய அதன் கீழுள்ள கட்டத்தில் சேவைகள், செயல்பாடுகளை அமைப்பது. அவற்றிற்கு திறந்த நியமங்களுடன் இடைமுகங்கள் அமைப்பது

இந்தப் படிமத்திலுள்ள ஏழு கட்டங்களாவன:

மேற்கோள்கள்தொகு

புறச் சுட்டிகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_வலையமைப்பு&oldid=2976673" இருந்து மீள்விக்கப்பட்டது