கண்ணீர்க்கோளவழல்
கண்ணீர்க்கோளவழல் (Dacryoadenitis) என்பது கண்ணீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது.
கண்ணீர்க்கோளவழல் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | கண் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | H04.0 |
ஐ.சி.டி.-9 | 375.0 |
நோய்களின் தரவுத்தளம் | 3430 |
மெரிசின்பிளசு | 001625 |
ஈமெடிசின் | oph/594 |
ம.பா.த | D003607 |
நோய்க் காரணங்கள், நோய் நிகழ்வு, இடர் காரணிகள்
தொகுகடிய கண்ணீர்க்கோளவழல் பொதுவாக தீ நுண்மம், பாக்டீரியா போன்ற நோய்த்தொற்றுகளினால் ஏற்படுகிறது. பொதுவான நோய்க் காரணங்களாக தாளம்மை (கூவைக்கட்டு), எப்ஸ்டீன்-பார் வைரசு, கோளவுயிரிகளான சுடாபிலோகாக்கஸ் (staphylococcus), மேகவெட்டை நோய் நுண்மம் (gonococcus) போன்றவைக் குறிப்பிடப்படுகின்றன. நீண்டகால கண்ணீர்க்கோளவழல் சாதாரணமாக நோய்த்தொற்றுகளற்ற அழற்சி சீர்குலைவுகளால் ஏற்படுகிறது. உதாரணமாக இணைப்புத்திசுப் புற்று (sarcoidosis) நோயைக் கூறலாம்.