கத்தார் (பாடகர்)

(கதர் (பாடகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கத்தார் (Gaddar, தெலுங்கு: గద్దర్) கதர் எனவும் பரவலாக அழைக்கப்படும் கும்மாடி விட்டல் ராவ் (Gummadi Vittal Rao, 1949 – 6 ஆகத்து 2023) ஓர் இந்தியக் கவிஞர், புரட்சிகர நாட்டுப்புறப் பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். கதர் 2010 வரை இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) இயக்கத்தில் தீவிரமாக இருந்தார், பின்னர் தெலங்காணாவின் மாநிலத்துக்கான இயக்கத்தில் சேர்ந்தார்.

கதர்
நிசாம் கல்லூரி வளாகத்தில் 2005 இல் நடைபெற்ற சந்திப்பில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1949
தூப்ரான், ஐதராபாத் இராச்சியம், தற்போது தெலங்காணா இந்தியா)
இறப்பு (அகவை 74)
ஐதராபாது, தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சிதெலங்கான பிரஜா முன்னணி
துணைவர்விமலா கதர்
வாழிடம்(s)ஐதராபாது, தற்போது தெலங்காணா)
முன்னாள் கல்லூரிஉசுமானியா பல்கலைக்கழகம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கதர் 1980 களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிச) மக்கள் போரில் உறுப்பினரானார் . அதன் கலாச்சார பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார்.

2010 வரை நக்சல் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட பின்னர், தன்னை அம்பேத்கரை தீவிரமாக பின்பற்றக்கூடியவராக அடையாளப்படுத்திக் கொண்டார். [1] 1910 களில் பஞ்சாபில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியை எதிர்த்த சுதந்திரத்திற்கு முந்தைய கதர் கட்சிக்கு நன்றி செலுத்தும் விதமாக இவர் தனது பெயரை கதர் என மாற்றிக்கொண்டார்.

 
பசுமை வேட்டை நடவடிக்கைக்கு எதிராக 2010 ல் கொல்கத்தாவில்

மறைவு தொகு

கத்தார் 2023 சூலை 20 இல் இதய நோய்க்காக ஐதராபாது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆகத்து 3 இல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.[2] 2023 ஆகத்து 6 இல் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் தனது 74-ஆவது அகவையில் உயிரிழந்தார்.[3][4][5]

விருதுகள் தொகு

நந்தி விருது :

  • 2011 - தெலுங்கானாவுக்கான சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான நந்தி விருது - ஜெய் போலோ திரைப்படத்திற்காக

மேற்கோள்கள் தொகு

  1. Swamy, Rohini (2018-12-04). "In Telangana, Naxal poet Gaddar embraces the ballot & old foes to fight 'fundamentalists'". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-03.
  2. Reddy, U Sudhakar (6 August 2023). "Renowned Telangana folk singer Gummadi Vittal Rao, popularly known as 'Gaddar', passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/articleshow/102477594.cms. 
  3. "Telangana: Poet activist Gaddar passes away at 77". The Siasat Daily. 6 August 2023. https://www.siasat.com/telangana-poet-activist-gaddar-passes-away-at-apollo-hospitals-2660638/. 
  4. "Telangana Poet Gaddar, Known For His Revolutionary Songs, Dies At 77". NDTV. https://www.ndtv.com/india-news/telangana-poet-balladeer-gaddar-dies-at-77-4273956. 
  5. "Famed Folk Singer Gaddar Passes Away at Apollo Hospital". www.telegraphindia.com.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தார்_(பாடகர்)&oldid=3770714" இலிருந்து மீள்விக்கப்பட்டது