கதிரியல் வெண்புள்ளி
எக்சு கதிர் படத்தினை சாதாரணமாகப் பார்க்கும் போது சிலசமயங்களில் சிறிதாக ஒளிர்வு செறிவு மாறுபாட்டின் காரணமாக ஒரு சீரற்ற தோற்றம் காணப்படும். இதுவே கதிரியல் வெண்புள்ளிகள் (radiographic mottle, அல்லது noise) எனப்படுகின்றன. இந்நிகழ்வு பொதுவாக வலுவூட்டும் திரையுடன் பெறப்படும் படங்களில் அதிகம் காணப்படும். கதிர் வீச்சு சீராக இருந்தாலும் வெண்புள்ளிகள் தோன்றுகின்றன. இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
கதிரியல் வெண்புள்ளிகள் (radiological mottle) ↓ ↓——————————————————————————↓ திரை வெண்புள்ளி படத்தாள் வெண்புள்ளி Screen mottle Film mottle ↓ ↓———————————————————↓ திரை அமைப்பு எக்சு கதிர் ஒளியன் எண்ணிக்கை Screen sturcture X ray quantum nos.
படத்தாளிலுள்ள வெள்ளி புரோமைடுப் படிகங்கள் ஒரே அளவில் இல்லாததால் படத்தாள் புள்ளிகள் தோன்றுகின்றன. எக்சு கதிர் ஒளியன்களின் எண்ணிக்கை மாறுவதால் குவாண்டம் வெண்புள்ளிகள் (quantum mottle) தோன்றுகின்றன.
வலுவூட்டும் திரையிலுள்ள படிகங்களின் உருவ வேறுபாடும் வெண்புள்ளிகளைத் தோற்றுவிக்கின்றன.