கதிர் உயிரியல்

(கதிர்உயிரியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கதிர் உயிரியல் (radiobiology) அல்லது கதிர்வீச்சு உயிரியல் (radiation biology) என்பது வாழும் உயிரினங்களில் அயனியாக்கும் கதிர்களின் தாக்கங்களை-விளைவுகளை-விரிவாக ஆயும் மருத்துவ அறிவியல் புலமாகும். இங்கு கதிர்வீச்சென்பது அயனியாக்கும் பண்புடைய எக்சு, காமா போன்ற ஒளியன்களையும் மின்னூட்டம் கொண்ட இலத்திரன், புரோத்தன், மின்னூட்டம் இல்லாத நியூத்திரன்களையும் குறிக்கும். உயிரணுக்கள் முதல் முழுவளர்ச்சி அடைந்த உயிரிகள் அனைத்தையும் குறிக்கும்.

மின்னூட்டம் கொண்ட துகள்கள் அவைகளின் மின்னூட்டம் காரணமாகவும் அவைகளின் நிறை காரணமாகவும் நேரடியாக அயனியாக்கம் நிகழக் காரணமாகின்றன. ஆனால் மின்காந்த அலைகளும் நியூட்ரான்களும் மறைமுகமாக அயனியாக்கம் நிகழ காரணமாகும்.

அயனியாக்கம் காரணமாகத் தோன்றும் விளைவுகள் மூலக்கூறுகளுக்கிடையே பிணைப்பை முறிக்கிறது. இதன் காரணமாக வேதிவிளைவுகள் தோன்றுகின்றன.முடிந்த நிலையில் அவைகள் உயிரியல் விளைவாக வெளிப்படுகின்றன.இவ்விளைவுகள் உடனடி விளைவாகவோ பலவருடங்கள் சென்றபின் தோன்றும் காலம் தாழ்ந்த விளைவாகவோ இருக்கக்கூடும்.இவையாவும் கதிர்களின் ஆற்றல் ,அவை ஏற்கப்படும் வீதம்,எந்தப் பகுதியில் கதிர்கள் ஏற்கப்படுகின்றன என்பன போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும்.விளைவுகள் குருதி அணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம்,தோல் சிவத்தல்,கண்புரை,இறப்புவரையில் கூட இட்டுச் செல்லும்.

ஆனாலும் உயிரினங்கள் மனிதன் உட்பட கதிர்வீச்சினை ஏற்று வாழப் பழகிவட்டன என்றே கூறவேண்டும்.உலகம் தோன்றிய நாள்தொட்டு உயிரினங்கள் அண்டக்கதிர்களாலும் பூமியிலிருந்து வெளிப்படும் கதிரியக்கக் கதிர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறன..மனித உடலிலேயே கரி 14, பொட்டாசியம் 40 போன்ற கதிர் தனிமங்கள் சிறிய அளவில் காணப்படுகின்றன.

எப்படிஇக்கதிர்கள் தீமை பயக்கின்றன என்பது நமக்குத் தெரிகிறது?

@ ஆரம்ப நாள்களில் கடிகார முகப்பில் ரேடியம் கலந்த கலவையின் துணையுடன் எண்களை குறிப்பது வழக்கம். இதனால் இரவிலும் எண்களைத் தெளிவாக க்காணமுடியும்.இப்படி ப்பட்ட பணியாளர்களிடம் காணப்பட்ட நோய்கள்.புற்று நோயும் கூட.

@ எக்சுகதிர்களை தொடக்க நாள்களில் போதிய காப்பு முன் எச்சரிக்கை எடுக்காகதால் தோன்றிய புண்கள். இது மருத்துவர்களிடமும் தொழில் நுட்பனர்களிடமும் காணப்பட்டன.

@ துகள்முடுக்கி எந்திரங்களில்பணியாற்றிய, தொடக்ககால அறிஞர்களும் பணியாளர்களும் எதிர்கொண்ட நலபாதிப்பு.

@இரண்டாவது உலகப் போரில் அணுவெடிப்பிற்கு ஆளாகி உயிர் பிழைத்தவர்களிடம் மேற்கொண்ட நீண்ட நாள் ஆய்வுகள்.

@ அண்மையில் ருசிய நாட்டின் செர்னோபில் அணுஉலை விபத்து.

@ அதுபோல் ஜப்பானில் ஏற்பட்ட புகுசிமா அணுஉலை பேரிடர்.

@ யுரேனிய சுரங்கப் பணியாள்ளர்களிடம் காணப்பட்ட நுரையீரல் நோய்.

இன்று மனிதனால் ஆக்கப்பட்ட எக்சு கதிர்கள் ,கதிரியக்கத்தனிமங்களிலிருந்து வெளிப்படும் கதிர்கள, அணு உலைகள், துகள் முடுக்கிகளிலிருந்து வெளியாகும் கதிர்கள் என பல அயனியாக்கும் கதிர்களே அச்சுறுத்தும் கதிர்களாக உள்ளன. இயற்கை கதிர்களை விட இது அதிகமாக இருக்கிறது.

கூற்றளவு என்பது இறப்பை சில மாதங்களில் தோற்றுவிக்கும் ஏற்பளவினைக் குறிக்கும்.இந்த அளவு 4 முதல் 5 கிரே அளவாகும்.கூற்றளவு 50/30 என்பது 30 நாட்களில் 50% இறப்பைக் கொடுக்கும் ஏற்பளவாகும்.இவ்வேற்பளவு வெவ்வேறு உயிரினங்ளுக்கு வெவ்வேறாக உள்ளன.மனிதர்களுக்கு இது 4 கிரே யாக உள்ளது.

அடியில் காணப்படும் அட்டவணை பல உயிரிகளுக்கு கூற்றளவு 50/30 என்னவென்று காட்டுகிறது.

குரங்கு 5 கிரே
மனிதன் 4 முதல் 6 கிரே
வௌவால் 6 முதல் 7 கிரை
பொன்மீன் 7 கிரே
தவளை 7 கிரே
ஆமை 15 கிரே
நத்தை 100 கிரே
ஈஸ்ட் 300 கிரே
பழ ஈ 60 கிரே
அமீபா 1000 கிரே
பரமேசியா 3000 கிரே

அளவாக உள்ளன

ஒப்பு உயிரியல் விளைவு ஒரே ஏற்பளவு உடைய இருவேறு கதிர்கள் ஒரே விளைவை அல்லாமல் வேறுபட்ட விளைவுகளைக் கொடுக்கின்றன.எடுத்துக் காட்டாக ஒரு கிரே அளவு எக்சு கதிர்கள் தோற்றுவிக்கும் விளைவைவிட ஒரு கிரே நியூட்ரான்கள் தோற்றுவிக்கும் விளைவு 10 மடங்கு அதிகமாகும்.அதாவது நியூட்ரான்களின் ஒப்புக் கதிரியல் விளைவு , எக்சு கதர்களைப் போல் 10 மடங்காகும்.10 என்பது நியூட்ரான்களின் ஒப்புக் கதிரியல் விளைவாகும்.

கூற்றளவினைவிடக் குறைந்த ஏற்பளவினை ஏற்ற உயிரினங்கள் சிற்சில துன்பங்களுடன் நீண்ட நாட்கள் வாழவும் கூடும்.இந்த ஏற்பளவு குறை கூற்றளவு எனப்படும.

உயிரணுக்கள் உயிர்வாழும் அனைத்திற்கும் அடிப்படையாகும்.உயிரினங்கள் மாறுபட்டாலும் அவைகளில் காணும் உயிரணுக்கள் ஒரேமாதிரியாகத் தான் உள்ளன. தனியொரு உயிரணுவாக,பெரிதாக ஆசுட்றிச் கோழியின் முட்டையினை கூறலாம்.ஒவ்வொரு உயிரணுவும் ஏற்கனவே உள்ள உயிரணுவிலிருந்து தோன்றுகிறது.ஒவ்வொரு உயிரணும் உயிரணுச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.இந்த உயிரணுவின் மையப்பகுதியில் கரு அமைந்துள்ளது.உயிரணுவிலிருந்து கருவை அகற்றிவிட்டால் உயிரணு செயலற்று மடிந்து போகும்.கருவில் பண்பகத்திரிகள் காணப்படுகின்றன.கருச்சுவருக்கும் உயிரணுச்சுவருக்கும் இடைப்பட்டப்புலத்தில் வளர்சிதை மாற்றங்கள் நடைபெறுகின்றன.மைட்டோகான்றியா என்னும் பகுதியில் உயிரணுவில் தோன்றும் ஆற்றல் சேமிக்கப்படுகறது.பண்பகத்திரியில் உள்ள ஜீன்கள் சந்ததி பண்புகளைக் கொண்டுள்ன.

உயிரினங்களில் கதிர்வீச்சின் தாக்கம்,தாக்கப்பட்ட உயிரியிடமோ அல்லது அடுத்தடுத்த சந்ததியிலோ ஏற்படலாம்.இவை முறையே தனக்குறு விளைவு என்றும் பாரம்பரிய அல்லது சந்ததி விளைவு என்றோ அறியப்படுகின்றன.

தனக்குறு விளைவாக, முடி உதிர்தல்,தோல் தொடர்புடைய புண்,கண் புரைநோய், மலட்டுத்தன்மை, போன்றவைகளைக் கூறலாம்.

சந்ததி விளைவாக ஊனமுற்றக் குழந்தை பிறப்பது, குழந்தை பிறந்த்தும் இறந்து விடுவது, புற்றுநோய் தோன்றுவது முதலியவைகளக் கூறலாம்.. மனிதரிடம் கதிர் ஏற்பளவும் அதனால் தோன்றும் விளைவும் கீழே,

ஏற்பளவு-கிரேயில் விளைவு
0 -- 0.5 வெளிப்படையான விளைவு ஏதுமில்லை.சிறிய அளவு குருதியில் மாற்றம்.
0.8 – 1.2 மனக்குமட்டல் ,வாந்தி. இது ஒரு நாள் நீடிக்கும்.தளர்ச்சி , பெரிதாக தொல்லை இல்லை.இது 5 -10% பேரிடம் காணப்படுகிறது
1.3 – 1.7 மேற்காட்டிய விளைவு. 25% பேரிடம்.
1.8 -2.2 50% பேரிடம்.இறப்பு இல்லை
2.7- 3.3 100% பேரிடம்.கூடுதலாக கதிர் நோய்.இரண்டு முதல் நான்கு வாரங்களில் 20% பேரிடம் மரணம்
4 – 5 50% முப்பது நாளில் மரணம்.
5.5 -7 4 மணி நேரத்தில் குமட்டலும் வாந்தியும். அத்தனை பேரிடமும்.100% இறப்பு.ஒருசிலரே உயிரத்து இருப்பர்
10 ஒரு மணிநேரத்தில் அனைவரும் மரணிப்பர்.
50 உடனடியாகச் செயல் இழப்பு.அனைவரும் மரணம்.

உடல் 60 முதல் 70 விழுக்காடு நீரால் ஆனது. எனவே கதிர்வீச்சால் தோன்றும் விளைவுகள் இந்த நீர்மூலக்கூறுகளின் வழியாகவே நிகழ்கின்றன என கொள்ளலாம்.

உயிரினங்களின் உயிரணுக்களில் எந்த மாதிரியான விளைவுகள் தோன்றுகின்றன? அவைகளை முறையே, ,உயிரணு சுழற்சியில் தாமதம்(Inhibition of cell cycle) ஏற்படுவது. ஒரு உயிரணுவிலிருந்து அடுத்த தலைமுடறை செல் உருவாக தேவையான கால அளவு அதிகரித்து காணப்படும்.பொதுவான வளர்ச்சி மாறுபடும்.

# உயிரணுக்களின் மரணம் Cell death).கதிர் ஏற்கப்பட்ட உறுப்பு, மொத்த கதிர் ஏற்பளவு, ஏற்பளவின் வீதம் இவைகளைச் சார்ந்து உயிரணுக்கள் மரணிக்கவும் கூடும்.
  1. ஜீன்களில் சடுதி மாற்றம் (Gene mutation).பண்பகத்திரியில் காணப்படும் ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள் சில பண்புகள் மறைக்கப்படலாம். முடியின் நிறம், கண்களின் அமைப்பு,போன்ற சிற்சில மாற்றங்கள் தோன்றக் கூடும்.
  1. பண்பத்திரிகளில் பிறழ்ச்சி.( chromosome mutation) என பலவாகும்.

வெவ்வேறு கதிர்வீச்சுகள் வெவ்வேறு அளவில் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன.ஒரே ஏற்பளவு எக்சு கதிர்களும் ஆல்ஃபா கதிர்களும் தோற்றுவிக்கும் விளைவுகள் மிகவும் வேறுபட்டுக் காணப்படுகிறன.விளைவுகளை ஒரே அளவில் குறிக்க கதிர்வீச்சு பெருக்கற் காரணியால் ஏற்பளவினைப் பெருக்கி பெறலாம்.

கதிர் பெருக்கற்காரணி
எக்சு,காமா கதிர்கள். 1
ஆல்ஃபா கதிர்கள் 10
புரோட்டான். 5
நியூட்ரான் 10
கனமான அயனிகள் 20

பெருக்கற் காரணி முன்பு பண்புக் காரணி எனப்பட்டது.

ஒரு கிரே ஆல்ஃபா கதிர்கள் 20 கிரே எக்சு கதிர்களுக்குச் சமம் ஆகும்.அதேபோல் ஒரு கிரே நியூட்ரான் என்பது 10 கிரே காமாக் கதிர்எளுக்குச் சமன் ஆகும்.இது கதிர் வீச்சு பெருக்கற்காரணி எனப்படுகிறது.

ஒவ்வொரு உடலுறுப்பும் ஒரே அளவு கதிர் வீச்சினை ஏற்றாலும் தோன்றும் விளைவு மாறுபட்டு காணப்படுகிறது. இதற்குக் காரணம் அந்த உறுப்புத் திசுக்களின் உணர்திறன் SENSITIVITY மாறுபடுவதே ஆகும் .திசு பெருக்கற்காரணியால் பெருக்கி உண்மையான விளைவினைத் தெரிந்து கொள்ளமுடியும்.

உயிரினங்களில் தோன்றும் மாற்றம் உயிரணுவின் கருவில் காணப்படும் பண்பகத்திரியில் காணப்படும் ஜீன் மற்றும் டி ஆக்சி றிபோநியூக்ளியசு அமிலத்தில்(DNA) தோன்றும் முறிவு –பிறழ்ச்சி - போன்றவைகளாலேயே நடைபெறுகிறது. முறிந்த துண்டுகள் அதிக ஒட்டும் தன்மையுடையன. எனவே அவைகள் தாறுமாறாக ஒட்டிக் கொள்ளக்கூடும். இதன் காரணமாக குரோமசோமின் மையப்பகுதி (Centromere ) இல்லாமலும் சில நேரங்களில் இரு மையப்பகுதியுடனும் பண்பகத்திரிகள் தோன்ற வாய்புண்டு.அரிதாக துண்டாடப்பட்ட பகுதிகள் தனியாகவும் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட துண்டுகள் ஒரு வளையம் போல் இணைந்து காணப்படுவதும் உண்டு. இவையாவும் நல்ல நுண்நோக்கியுடன் காணமுடியும்.

உயிரணுச் சுழற்சி ( cell cycle) என்பது ஒரு செல் உருவானதிலிருந்து அது வளர்ந்து இரண்டாக் பிரிய எடுத்துக் கொள்ளும் கால அளவாகும்..இந்தக் கால அளவு வெவ்வேறு உயிரணுக்களுக்கு வெவ்வேறாக உள்ளது.ஒரு செல் உருவானதும் அது ஓய்வுநிலையில் கொஞ்ச நேரம் இருக்கிறது.. பின்பு வளர ஆரம்பிக்கிறது.மறுபடியும் சற்று ஓய்வு நிலை. இதனைத் தொடர்ந்து பிரிகிறது. இவை முறையே ஓய்வு நிலை 1, ஆக்கநிலை, ஓய்வுநிலை 2, பிரிநிலை எனப்படுகின்றன.இந்த நிலைகளுக்கான கால அளவும் மாறுபடுவதுடன் ஒவ்வொரு வகையான உயிரணுவிற்கும் மாறுபட்டுக் காணப்படுகிறது.

எக்சு,காமா கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அவை மருத்துவத்தில் பயன்படுத்தப் பட்டன..அப்போதே சிற்சில தீய விளைவுகள் காண்டு கொள்ளப்பட்டன.

இந்த விளைவுகளைக் கட்டுப்படுத்தும் வழி என்ன?எளிதாக

$ கதிர்வீச்சிலிருந்து முடிந்த அளவு தொலைவில் இருப்பது,இதற்கு முக்கிய காரணம் எதிர் இருமடி வதிப்படி( Inverse square law) கதிர் வீச்சின் செறிவு குறைவதே ஆகும். $ குறைந்த காலம் கதிர் புலத்தில் இருப்பது,ஒருபணியினை செய்யும் முன் ஒத்திகைப் பார்துக் கொள்வது பயனுள்ள ஒரு செயலாகும். $ பாதுகாப்புக் கேடயங்களை பயன்படுத்துவது.முதன்மைக் கதிர்கள் நேரடியாக தாக்காகமல் ஈயச் செங்கல்களைப் பயன்படுத்தி கதிர்களின் செறிவைக் குறைக்கலாம்.

பன்நாட்டுக் கதிரியல் காப்புக் கழகம் International commission for radiation protection -ICRP),கதிரியல் துறையில் பணியாற்றும் தனிநபர், அவரின் வழித்தோன்றல் மற்றும் மனித சமுதாயத்தினைக் இத்தகு அயனியாக்கும் கதிர்களிலிருந்து காப்பாற்ற அவ்வப்போது தனது பரிந்துரைகளைக் வெளிக்கொணர்கிறது..அண்மைய விதிப்படி ஐய்து ஆண்டு சராசரி 0.02 சீவர்டு ஏற்பளவினை பரிந்து உரைக்கிறது.பொதுமக்களுக்கு இது 1/10 ஆகவும் கரு உற்ற பெண் பணியளர்களுக்கு 0.02 அளவில் 3/10 ஆகவும் பரிந்தஉரை செய்துள்ளது.

ஒருவர் பணிநாள் முழுவதுமாக 0.02(N-18) அளவு பெறலாம் இங்கு N என்பது அவர் வயதாகும். 18 என்பது பணியில் சேர்ந்த வயதாகும்.

அயனியாக்கும் கதிர்கள் உயிரினங்களில் விழும் போது அந்த உறுப்புகள் அதிக ஆக்சிஜன் பெற்று இருக்குமானால் அங்குள்ள திசுக்கள் அதிக கதிர் உணர்திறனுள்ளதாக இருக்கும் .இதனால் சேதம் அதிகமா இருக்கும்.இது ஆக்சிஜனால் அதிகரிக்கும் விளைவு எனப்படுகிறது.

இதுபோல் கதிர்வீச்சினை பெறும் உறுப்பு அதிக வெப்பநிலையில் இருக்கும் போதும் அதிக உணர்திறன் பெற்றுக் காணப்படுகிறது. இது வெப்பத்தால் அதிகரிக்கும் விளைவு எனப்படும்.

இவ்விரு பண்புகளும் கதிர் மருத்துவத்தில் பயன்படுகின்றன.இதுபோல் சில மருந்துகளும் கதிர் உணர்திறனை (Sensitising) அதிகரிக்க கதிர்மருத்துவத்தின் போது பயன் படுத்தப்படுகின்றன.

ஆக்சிஜன் உயர் வெப்பநிலை மற்றும் மருந்துகள் யாவும் ஏற்பளவினை மாற்றும் காரணிகள் எனப்படுகின்றன.

முன்பே ஒரு உயிரணுவிலிருந்து ,ஒன்று இரண்டாகவும் ,இரண்டு நான்காகவும் செல்கள் பிரிந்து வளர்கின்றன என கண்டோம்.செல் பிரவு இரண்டு வகைப்படும்.

2) மாறாக மெயோசிஸ் (Meiosis) என்னும் செல் பிரிவின் போது,- இது பொதுவாக பாலின செல்களில் நிகழும்-,ஒவ்வொரு பெற்றோரிடமிருந்து வரும் பண்பகத்திரிகள் இணையாக இல்லாமல் ,ஒன்றாக வெளிப்பட்டு பின் இணைகின்றன.பாலினத்தை இவ்வாறான கூடுகையே தீர்மானிக்கிறது.கருக்கட்டிய உயிரணுக்கள் மிகவும் கதிருணர் திறன் கொண்டவையாகும்.குறைந்த அளவு கதிர் ஏற்பு கூட கருவினைக் கலைந்துவிடக் கூடும்.கதிர்வீச்சின் தீய விளைவுகளில் மிகவும் முக்கியமானது கருச்சிதைவு, ஊனமுற்றக் குழந்தைப் பிறப்பது,சில சமயங்களில் பிறந்து சில நாட்களே ஆனதும் குழந்தை மரிப்பது இவைபோன்றவை நிகழலாம்

ஆண்களிடம் 10 கிரே அளவும் பெண்களிடம் 1.5 கிரே அளவும் கூட நிரந்தர மலட்டுத்தன்மையினை தோற்றுவிக்கிறது.

கதிர் வீச்சின் காரணமாக முடி உதிர்வது Epilation) தெளிவாகவே தெரிகிறது. புற்று நோய்க்காக கதிர் மருத்துவம் பெற்ற நோயாளிகளிடம் இது மிகவும் தெளிவாத்தெரிகிறது.

புறத்தோலில் கதிர் ஏற்பளவு ,தோலின் நிறத்தினை மாற்றுகிறது.ஆரம்ப நாட்களில் தோல்சிவத்தல்( Erythema) தோலின் தாங்கும் ஆற்றலைக்குறிக்க பயன்பட்டது.அளவு கூடக்கூட தோலில் புண் ஏற்படுகிறது.

கண்புரை நோய் (cataract) என்பது கண்விழி வில்லை தனது ஒளி கடத்தும் பண்பை இழப்பதால் ஏற்படுகிறது.கதிர் வீச்சு கண்வில்லைகளால் அதிகம் ஏற்கும் நிலையில் பார்வையினை இழக்க வழிவகுக்கிறது.

குருதியில் கதிர் ஏற்பளவு கூடும் போது வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. பின் இதுவே மிகவும் அதிகரித்து குருதி வெள்ளை அணு புற்றாக- லுக்கிமியா-மாறுகிறது.

கதிர்நோய் (Radiation sickness) ) என்பது கதிர்வீச்சிற்கு ஆளான மனிதரிடம் காணும் நோயாகும்.இது கதிர்வீச்சின் அறிகுறிகள் (Radiation syndrome) ) என்றும் அறியப்படும்.

2 அல்லது 3 கிரே அளவு ஏற்பளவு கூட குமட்டல் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் ஆனால் இது கூற்றளவினை வட சற்றே குறைவானது என்பது அவருக்குத் தெரிவதில்லை.இது முன்பு கூறிய பல அறிகுறிகளுடன் தோன்றும்.ஆனால் இந்த அளவினை ஏற்கும் மனிதன் அதனைப் பற்றி ஏதும் உணரமாட்டார் என்பது தான் உண்மை.

எந்த புற தூண்டுதலும் இல்லாமல் இயற்கையிலேயே புற்றுயோய் தோன்றுகிறது.மனிதரிடம் இந்த நோய் தோன்றும் வாய்பினை இரு மடங்காக அதிகரிக்க தேவையான ஏற்பளவு இரட்டிப்பாக்கும் கதிர் ஏற்பளவு ( Doubling dose )எனப்படுகிறது.இந் அளவு 0.2 முதல் 0.8 கிரே வரையிலுள்ளது.அதாவது 20 முதல் 80 ராட் கதிர் ஏற்பளவு இயற்கையில் தோன்றும் புற்றின் அளவினை இருமடங்காக அதிகரிக்கும்.

மூளையில் போதுமான அளவு கதிர்கள் ஏற்கப்பட்டால் ,சாதாரண அளவிலும் மூளை வரைவியில் மாற்றங்களைக் காணமுடிகிறது. வாழ்நாள் இழப்பும் கண்டு உணரப்பட்டுள்ளன.கதிரியல் துறையில் பணியாற்றிய மருத்துவர்களும் தொழில் நுட்பனர்களும் பொதுமக்களைவிட ஐந்து வருடங்கள் குறைவாகவே வாழ்ந்துள்ளனர்.

மார்புப் பகுதியில் மிகவும் கதிர் உணர்திறனுடைய உறுப்பு நுரையீரலாகும்.இதனால் மார்புப்பகுதியில் கதிர்மருத்துவம் மேற்கொள்ளும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நுரையீரல் அழற்சி, கொள்ளளவு குறைந்து போதல்,திசுக்கள் விறைத்துபவ போதல் போன்ற பல துன்பியல் விளைவுகள் ஏற்படுகின்றன.இது 10-20 கிரே அளவில் கூட காணப்படுகிறது..இறப்பைத் தவிர்த பிற துன்பங்கள் செருமானிய யுரேனியச் சுரங்கத்தொழிலாளர்களிடமும் செக்கோசுலாவாக்கிய சுரங்கத்தொழிலாளர்களிடமும் காணப்பட்டுள்ளன.ரேடான் காற்றும் அதன் சேய் தனிமங்களின் கதிர்வீச்சுமே இதற்குக் காரணம்.சப்பானிய குண்டு வீச்சிற்குப் பின் பிழைத்தவர்களிடம் நுரையீரல் புற்று அதிக அளவில் காணப்பட்டதும் இங்கு கவனிக்கபட வேண்டும்.

வயிற்றுப் பகுதியில் கதிர் வீச்சிற்கு ஆளானவர்களிடம் வயிற்றுப்போக்கு,வலி தோன்றுகிறது.வாய் வரண்டு போவதும் சுவை உணர்வு குறைந்தும் இருக்கிறது.

கதிர் மருத்துவம் பெற்ற நோயாளிகள் இடம் அதன் விளைவாக புதிதாக புற்றுநோய் தோன்றி உள்ளதா என காண்பது கடினம்.ஆனால் வட்டப்புழு,தைமசு சுரப்பியில் வீக்கம்,முதுகு வலி, குழந்தைப் பிறப்பிற்குப்பின் மார்பகத்தில் வலி,அதிகத் தீட்டுப் படுதல் முதலிய துன்பங்களுக்காக கதிர் மருத்துவம் பெற்றவர்களிடம் அதிக அளவில் தோல் புற்றுக் காணப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.காசநோய்க்காக ஒளிர்திரையில் அடிக்கடி நோதனைக்காளான பெண்களிடம் அதிக முலைப்புற்று தோன்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

அண்மைய ஆய்வின் படி இந்தியாவில் வருடத்திற்கு சுமார் பத்து லட்சம் புது புற்று நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இதில் சுமார் இரண்டு லட்சம் பேர் மரணம் அடைகின்றனர்.புற்று நோயாளிகள் கதிர் மருத்துவத்தால் நல்ல குணம் பெறுகின்றனர்.

கதிர்வீச்சின் விளைவுகள் பொதுவாக மேலும் இரு வகையாக ஆராயப்படுகின்றன.சில விளைவுகள் தோன்ற ஒரு வரம்பளவு (detriministic effect)உள்ளன.எடுத்துக்காட்டிற்காக கண்புரை நோய் ,மலட்டுத்தன்மை, போன்றவைகளைக் கூறலாம்.

மேலும் சிலவற்றிற்கு எந்த வரம்பளவும் இல்லை. (Stochatic effect). பன்நாட்டுக கதிரியல் காப்புக் கழகம்,சில உறுப்புகளை மிகவும் முக்கியமானவை என்று கோடிட்டுக் காட்டி உள்ளது.இவைகளில் ஏற்றுக் கொள்ளப் படும் கதிர் ஆற்றல் மிகவும் தீய விளைவுகளைக்க் கொடுக்கும் என்பதனால்.பாலினச் சுரப்பிகளும் சிவப்பு எலும்பு மென்பொருளும் முதலில் மிகவும் முக்கியமானது என்று வரையறுத்தது.(1966). ஆனால் 1977-ல் இவை சரியல்ல என்று கருத்துத் தெரிவித்து ,பல உறுப்புகளுக்குமான இடர்காரணி வெளியிட்டது.முலைப்புற்று போன்றவைகளுக்கு வயதும் கவனிக்கப்பட வேண்டும்.ஆனால் இது மிகவும் குறைந்த அளவே.

உசாத்துணை

தொகு
  • பாபா அணுவாராய்ச்சி மையம், மும்பை, குறிப்புகள்

மேலும் வாசிக்க

தொகு
  • Eric Hall, Radiobiology for the Radiologist. 2006. Lippincott
  • G.Gordon Steel, "Basic Clinical Radiobiology". 2002. Hodder Arnold.
  • The Institute for Radiation Biology at the Helmholtz-Center for Environmental Health [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_உயிரியல்&oldid=4000529" இலிருந்து மீள்விக்கப்பட்டது