கதிர்த்திருப்பம்

நிகழ்வு சமஇரவு கதிர்த்
திருப்பம்
சமஇரவு கதிர்த்
திருப்பம்
மாதம் மார்ச்சு சூன் செப்டம்பர் திசம்பர்
ஆண்டு நாள் நேரம் நாள் நேரம் நாள் நேரம் நாள் நேரம்
2019 20 21:58 21 15:54 23 07:50 22 04:19
2020 20 03:50 20 21:43 22 13:31 21 10:03
2021 20 09:37 21 03:32 22 19:21 21 15:59
2022 20 15:33 21 09:14 23 01:04 21 21:48
2023 20 21:25 21 14:58 23 06:50 22 03:28
2024 20 03:07 20 20:51 22 12:44 21 09:20
2025 20 09:02 21 02:42 22 18:20 21 15:03
2026 20 14:46 21 08:25 23 00:06 21 20:50
2027 20 20:25 21 14:11 23 06:02 22 02:43
2028 20 02:17 20 20:02 22 11:45 21 08:20
2029 20 08:01 21 01:48 22 17:37 21 14:14

கதிர்த்திருப்பம் (Solstice) என்பது கதிரவன் தன் கதிர்வீதியில் திசை மாறும் நிகழ்வை/நாளைக் குறிக்கும். இந்நாளில் கதிரவனின் கதிர்கள் புவியினை மிகுந்த சாய்வுடன் சந்திக்கின்றன. கதிரவன் திசை திரும்பும் முன் தனது நகர்தலை நிறுத்துவதுபோல உள்ளதால் இலத்தீனில் இந்நாளை சோல்சுடைசு (சோல் - கதிரவன்,சிசுடைர் - நிற்றல்) என குறிக்கின்றனர்.

சூன் கதிர்த்திருப்பம் அன்று புவியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை நோக்கியும் புவியின் தெற்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகியும் இருக்கும். வடக்கு அரைக்கோளத்தில் இதனை வேனில் கால கதிர்த்திருப்பம் எனப்படுகிறது. அன்று பகல்பொழுது மிக கூடுதலாக இருக்கும். சூன் 21 அன்று இது நிகழ்கிறது.

திசம்பர் கதிர்த்திருப்பம் அன்று புவியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகியும் புவியின் தெற்கு அரைக்கோளம் சூரியனை நோக்கியும் இருக்கும். வடக்கு அரைக்கோளத்தில் இதனை குளிர்கால கதிர்த்திருப்பம் எனப்படுகிறது. அன்றைய தினம் பகற்பொழுது மிகக் குறைவாக இருக்கும். திசம்பர் 21 அன்று இது நிகழ்கிறது.

உலகின் பல பாகங்களிலும் இந்நாட்கள் விழாக்களாகவும் விடுமுறை நாட்களாகவும் கொண்டாடப்படுகின்றன. கிருத்துவ சமயத்தில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் குளிர்கால கதிர்த்திருப்பத்திற்கு மூன்று நாட்களில் உள்ளதைக் காண்க. இந்து தொன்மவியலில் தை மாதம் துவங்கும் நாளாக இது கருதப்படுகிறது; தட்சிணாயன சங்கிராந்தி, பொங்கல் விழா என கொண்டாடப்படுகிறது. வேனிற்கால கதிர்த்திருப்பம் ஆடி மாதம் துவங்கும் நாளாக கருதப்படுகிறது; உத்தராயண சங்கிராந்தி எனக் கொண்டாடப்படுகிறது.

படக்காட்சியகம்

தொகு

குறிப்பு

தொகு
  1. Astronomical Applications Department of USNO. "Earth's Seasons - Equinoxes, Solstices, Perihelion, and Aphelion". பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
  2. "Solstices and Equinoxes: 2001 to 2100". AstroPixels.com. 20 February 2018. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.

பிற பக்கங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்த்திருப்பம்&oldid=3599383" இலிருந்து மீள்விக்கப்பட்டது