வரலாற்று ரீதியாக, கத்தானா (katana (?)) என்பது பாரம்பரியமாக உருவாக்கப்பட்ட சப்பானிய வாட்களில் (日本刀 நிகோன்டோ?)[2][3] ஒன்று ஆகும். அவை சப்பானிய மானியம் பெற்ற சாமுராய்களினால் பயன்படுத்தப்பட்டன.[4] தற்காலக் கத்தானாவின் பதிப்புகள் சில நேரங்களில் பாரம்பரிய மூலப்பொருட்கள், முறைகள் பயன்படுத்தாமல் செய்யப்படுகின்றன. கத்தானா அதன் தனித்துவமான தோற்றங்களான வளைந்த, மெல்லிய, ஒற்றை முனைக் கத்தியானது வட்ட அல்லது சதுரப் பாதுகாப்புக் கொண்டு, இரண்டு கைகளுக்கு இடமளிக்கும் நீண்ட பிடி என்பவற்றால் வகைப்படுத்தப்படும்.

கத்தானா (?)
வாள்வீரர் "மெசமுனே"யால் கையொப்பமிடப்பட்ட (城和泉守所持), 14 ஆம் நூற்றாண்டு கமகுரா கால, தங்கம் பதித்த, 70.6 செ.மீ நீளமுடைய கத்தானா[1]
வகைவாள்
அமைக்கப்பட்ட நாடுஜப்பான்
உற்பத்தி வரலாறு
உருவாக்கியதுமுரோமச்சிக் காலம் (1392–1573) முதல் தற்போது வரை
அளவீடுகள்
எடை1.1–1.3 கி
கத்தி நீளம்கிட்டத்தட்ட 60–73 செ.மி (23 5828 34 அங்குலம்)

வாள் வகைவளைந்தது, மெல்லியது, ஒற்றை முனைக் கத்தி, கூம்பு
கைப்பிடி வகைவட்ட அல்லது சதுரப் பாதுகாப்புடன், இரு கைகள் வீச்சு

வரலாறு

தொகு
 
சப்பானிய இடோ கால மரப்பலகை அச்சில் தச்சியுடன் ஒரு சாமுராய்.

சப்பானில் வாள் உற்பத்தி பின்வரும் காலங்களுக்கேற்பப் பிரிக்கப்படுகின்றது:

  • யோகோடே - Jōkotō (பண்டைய வாட்கள், கி.பி 900 வரை)
  • கோடோ - Kotō (பழைய வாட்கள், கிட்டத்தட்ட 900–1596)
  • சின்டோ - Shintō (புதிய வாட்கள், 1596–1780)
  • சின்சின்டோ - Shinshintō (மிகப் புதிய வாட்கள், 1781–1876)
  • கென்டாயிட்டோ - Gendaitō (தற்கால வாட்கள், 1876–1945)[5]
  • சின்சாகுடோ - Shinsakutō (மிகவும் அண்மித்த கால வாட்கள், 1953–தற்போது)[6]

முதன் முதலில் "கத்தானா" எனும் சொற் பாவனை ஆரம்ப கமகுரா காலத்தில் (1185–1333) இருந்த "தச்சி" வாளைவிட வேறுபட்டிருந்த நீண்ட வாளுக்குப் பயன்படுத்தப்பட்டது.[7] இந்தக் குறிப்பிடுதல் குறைந்த தர வீரர்களுக்கான, மலிவான வாளைவிட வேறுபட்ட வடிவம் கொண்ட "உச்சிகத்தானா" (uchigatana), "சுபகத்தானா" (tsubagatana) என்பவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டது. தச்சி வாளிலிருந்த கத்தானாவுக்கான பரிணாம வளர்ச்சி ஆரம்ப முரோமாச்சி காலத்தில் (1337–1573) ஆரம்பமாகியது. கிட்டத்தட்ட 1400 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், நீண்ட வாட்கள் "கத்தானா" என்ற கையொப்பத்துடன் காணப்பட்டன. சாமுராய் கொண்டிருந்த தச்சிக்குப் பதிலாகக் "கத்தானா பாணி" என்று அழைக்கப்பட்டது. சப்பானிய வாட்கள் அணிந்திருப்பவருக்கு எதிரான பக்கத்தில் கையெழுத்து இருக்குமாறு பாரம்பரியமாக அணியப்படுகிறது. தச்சி கத்தானா பாணியில் அணியப்படுகையில், தச்சியின் கையொப்பம் பிழையான பக்கத்தில் அமையலாம். இக்காரணங்களினால் வாள் உருவாக்குனர் கத்தானா கையொப்பத்துடன் உருவாக்கினர். ஏனெனில் அக்கால சில சாமுராய்கள் வேறு காரணங்களுக்காகவும் அணிந்திருந்தனர்.[8][9]

நெருங்கிய சண்டைப் போர்களில் இயல்புப் போக்கை மாற்றியதால் கத்தானாவின் புகழ் சாமுராய்களிடத்தில் அதிகரித்தது. வாளை விரைவாக இழுப்பது சண்டைக்கு மிகவும் பொருத்தமாய் இருந்து, வேகமாகப் பதிலளிப்பு முறையில் வெற்றி பெரிதும் சார்ந்திருந்தது. மேற்பக்கக் கூரான முனையுடன் பட்டி போன்ற சட்டத்திற்கூடான தள்ளுதலுடன் அணியப் பெற்றதன் மூலம் இது மேலதிக வசதியைக் கொண்டிருந்தது. சாமுராய் ஒரே அசைவு மூலம் எதிரியைத் தாக்கத்தக்கதாக வாளினைப் பற்றி இழுக்க முடியும். முன்னர், தச்சி வளைவு கூர்முனை கீழாக இருக்குமாறு, பட்டியிலிருந்து விலகியவாறு அணிந்திருந்தனர்.[7][10]

கத்தானாவின் நீளம் வரலாற்று ரீதியாக வேறுபட்டுக் காணப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கத்தானாவின் நீளம் 70 முதல் 73 செ.மீ (27½ and 28½ in) வரைக்கிடையில் காணப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதன் சராசரி நீளம் 60 செ.மீ (23½ அங்) இருந்தது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இதன் சராசரி நீளம் கிட்டத்தட்ட 73 செ.மீ (28½ அங்) ஆகக் காணப்பட்டது.

கத்தானா அடிக்கடி இதைவிட சிறிய வாளுடன் இணைந்து காணப்பட்டது. இதனுடன் இணைந்து காணப்பட்ட வாள்களில் ஒன்றாக "டய்சோ" (daishō) இருந்தது. "டய்சோ"வை சாமுராய் மட்டுமே அணிவர். அது சாமுராயின் சமூக சக்தியையும் தனிப்பட்ட புகழையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.[7][10][11]

உசாத்துணை

தொகு
  1. "金象嵌銘城和泉守所持 正宗磨上本阿" 刀 金象嵌銘城和泉守所持 正宗磨上本阿 (in Japanese). National Institutes for Cultural Heritage. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. Manouchehr Moshtagh Khorasani (2008). The Development of Controversies: From the Early Modern Period to Online Discussion Forums. Peter Lang. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-03911-711-6.
  3. Evans Lansing Smith; Nathan Robert Brown (2008). The Complete Idiot's Guide to World Mythology. Alpha Books. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59257-764-4.
  4. Kokan Nagayama, trans. Kenji Mishina (1997). The Connoisseur's Book of Japanese Swords. Tokyo, Japan: Kodansha International Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 4-7700-2071-6.
  5. Clive Sinclaire (1 நவம்பர் 2004). Samurai: The Weapons and Spirit of the Japanese Warrior. Lyons Press. pp. 40–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59228-720-8.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. トム岸田 (24 செப்டம்பர் 2004). 靖国刀. Kodansha International. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4-7700-2754-2. {{cite book}}: Check date values in: |date= (help)
  7. 7.0 7.1 7.2 Kanzan Sato (1983). The Japanese Sword: A Comprehensive Guide (Japanese arts Library). Japan: Kodansha International. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87011-562-2.
  8. Stephen Turnbull (8 பெப்ரவரி 2011). Katana: The Samurai Sword. Osprey Publishing. pp. 22–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84908-658-5. {{cite book}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  9. Kōkan Nagayama (1997). The Connoisseur's Book of Japanese Swords. Kodansha International. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4-7700-2071-0.
  10. 10.0 10.1 Leon Kapp, Hiroko Kapp, Yoshindo Yoshihara (1987). The Craft of the Japanese Sword. Japan: Kodansha International. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87011-798-5.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  11. Oscar Ratti and Adele Westbrook (1991). Secrets of the Samurai: The Martial Arts of Feudal Japan. Tuttle Publishing. p. 484. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8048-1684-7.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தானா&oldid=3848929" இலிருந்து மீள்விக்கப்பட்டது