கந்தக நீக்கம்

கந்தக நீக்கம் (Desulfurisation) என்பது ஒரு வேதிப் பொருளில் இருந்து கந்தகத்தை நீக்கும் வேதிச்செயல் முறையாகும். இச்செயல்முறை ஒரு மூலக்கூற்றில் இருந்து கந்தகத்தை நீக்குவதாக (எ.கா: A=S → A:) இருக்கலாம் அல்லது பெட்ரோலிய வேதிப்பொருட்கள் அல்லது வெளியேறும் புகை போன்ற கலவைகளில் இருந்து கந்தகச் சேர்மங்களைப் பிரிப்பதாகவும் இருக்கலாம்[1].

பெரிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழலில் இந்த செயல்முறைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தொடுகைச் செயன்முறை, கிளாசு செயன்முறை போன்ற தயாரிப்பு முறைகளில் கந்தகம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. கந்தகம் இல்லாத சேர்மங்களை இத்தகைய வினையூக்கச் செயல்முறைகளில் பயன்படுத்த முடிந்தால் தீங்கு விளைவிக்கும் கந்தகச் சேர்மங்களை சுற்றுச்சூழலில் வெளியிடப்படுவதைக் குறைக்க முடியும். அதிலும் குறிப்பாக சுற்றுச் சூழலில் கலந்து அமில மழைக்குக் காரணமாகும் கந்தக டை ஆக்சைடைக் குறைக்கலாம்.

ஈரகந்தக அமிலச் செயல்முறை, கந்தகம் மற்றும் நைட்ரசன் ஆக்சைடு செயல்முறை, ஐதரோகந்தகநீக்கம் உள்ளிட்ட செயல்முறைகள் கந்தக நீக்க வினையில் சேர்ந்தவையாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Babich, I (April 2003). "Science and technology of novel processes for deep desulfurization of oil refinery streams: a review⋆". Fuel 82 (6): 607–631. doi:10.1016/S0016-2361(02)00324-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தக_நீக்கம்&oldid=2747824" இலிருந்து மீள்விக்கப்பட்டது