கனரா முத்துப் புள்ளி

முத்துப்புள்ளி மீன்
பிரான்சிசு டே வரைந்த ஓவியம் (1878)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிச்சிலிடு
பேரினம்:
இனம்:
எ. கனரென்சிசு
இருசொற் பெயரீடு
எட்ரோபிளசு கனரென்சிசு
பிரான்சிசு டே, 1877

எட்ரோபிளசு கனரென்சிசு என்பது கனரா முத்துப் புள்ளி (Canara pearlspot) அல்லது பட்டை குரோமைடு, கனரா முத்துப் புள்ளி சிச்லிடு, இந்தியாவில் தென் கர்நாடகாவைச் சேர்ந்த அருகிய சிச்லிடு மீன் சிற்றினமாகும்.[2]

வாழ்விடம் மற்றும் விநியோகம் தொகு

ஆசியாவைச் சேர்ந்த சில வகையான சிக்லிடு வகைகளுள் இதுவும் ஒன்றாகும். மேலும் எட்ரோபிளசு பேரினத்தினைச் சார்ந்த பிற சிற்றினங்களைப் போல இந்த மீனினம் உவர் நீரில் காணப்படுவதில்லை. நன்னீரில் மட்டுமே காணப்படுகிறது.[2]

அளவு தொகு

கனரா முத்துப் புள்ளி சிச்சிலிடின் உடல் நீளம் 11.5 சென்டிமீட்டர்கள் (4.5 அங்) நீளம் வரை வளரக்கூடியன.[3]

மீன்காட்சியகத்தில் தொகு

இது மிகவும் விரும்பப்படும் சிச்லிடு மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலையில் அரிதாகக் காணப்படும் சிச்லிடு மீன் இனமாகும். சமீப காலங்களில் செயற்கை வளரிடங்களில் இனப்பெருக்கம் செய்வதாகக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Ali, A. (2011). "Etroplus canarensis". The IUCN Red List of Threatened Species 2011: e.T169618A6655376. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T169618A6655376.en. 
  2. 2.0 2.1 "Etroplus canarensis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2013 version. N.p.: FishBase, 2013.
  3. "Etroplus canarensis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2013 version. N.p.: FishBase, 2013.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனரா_முத்துப்_புள்ளி&oldid=3318864" இலிருந்து மீள்விக்கப்பட்டது