கன்னடத் திரைப்படத்துறை

(கன்னடத் திரையுலகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கன்னடத் திரைப்படத்துறை (Kannada cinema), சந்தனவனா,[3] என்றும் அழைக்கப்படுவது இந்திய மாநிலமான கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியில் தயாரிக்கும் திரைப்படத் தொழிலைக் குறிப்பது ஆகும். கன்னடத் திரைப்படத் தொழிலானது இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகியவற்றுக்கு அடுத்த ஐந்தாவது மிகப்பெரிய திரைப்படத் தொழிலாகும். 2013 வரை, பெங்களூரு நகரத்தை அடிப்படையாகக் கொண்ட கன்னட திரைப்படத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.[4] கன்னடப் படங்கள் கர்நாடகத்தில் உள்ள 950 க்கும் மேற்பட்ட ஒற்றை மற்றும் பல்படி திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன, மேலும் இவை பெரும்பாலும் நாடு முழுவதுமும், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா, அரேபியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளிலும் வெளியிடப்படுகின்றன.[5][6]

கன்னடத் திரைப்படத்துறை
பெங்களூரில் பிவிஆர் சினிமா
திரைகளின் எண்ணிக்கைகர்நாடகத்தில் 950 திரையரங்குகள்
முதன்மை வழங்குநர்கள்விஜயலட்சுமி கம்பைன்ஸ்
கேசிஎன் மூவிஸ்
ஜெயண்ணா கம்பைன்ஸ்
யோகராஜ் கிரியேசன்ஸ்
மைசூர் டாக்கிஸ்
கேஆர்ஜி ஸ்டுடியஸ்
தூகுதீபா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
விருஷவேந்திரி புரொடக்சன்
ராக்லைன் புரோடக்சன்
கே மஞ்சு கிரியேசன்ஸ்
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2016)[1]
மொத்தம்187
நிகர நுழைவு வருமானம் (2016)[2]
தேசியத் திரைப்படங்கள்India: 750 கோடி (US$94 மில்லியன்)[2]

இந்தியாவில் முதன் முதலில் திரைப்படம் தொடர்பான தொழில்நுட்ப படிப்புகளை வழங்கிய அரசு நிறுவனமான ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பலதொழில்நட்பக் கலுலூரி 1941 இல் பெங்களூரில் நிறுவப்பட்டது. 1996 செப்டம்பரில், இரண்டு சிறப்பு படிப்புகளாக, ஒளிப்பதிவு மற்றும் ஒலி & தொலைக்காட்சி என பிரிக்கப்பட்டன மேலும் இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக உலக வங்கி உதவிக் கருத்திட்டின்கீழ் ஹெசரகட்டாவில் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம் துவங்கப்பட்டது.[7] கன்னடத் திரைப்பட உலகமானது கன்னட மொழி இலக்கிய படைப்புகளைத் திரைப்பட ஊடகமாக மாற்றுவதற்காக சிறப்பாக அறியப்படுகிறது. இதில் உலகளாவிய பாராட்டை பெற்ற சில படைப்புகள்; பி. வி. கரந்தின் சோமன துடி (1975), கிரிஷ் கர்னாட்டின் காடு (1973), பட்டபிராம ரெட்டியின் சம்ஸ்காரா (1970) (உ. இரா. அனந்தமூர்த்தியின் சிறந்த புதினம்), இது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் வெண்கலச் சிறுத்தை பரிசை வென்றது,[8] மற்றும் கிரிஷ் கசரவள்ளியின் கதஸ்ரதா (1977) இது ஜெர்மனியின் மான்ஹம் திரைப்பட விழாவில் பணப் பரிசை பெற்றது.[9][10][11]

கன்னடத்தின் பிரபலமான திரைப்படங்களாக கருதப்படுபவை பேடர கண்ணப்பா (1954), ஸ்கூல் மாஸ்டர், வம்சவிருக்‌ஷா (1971), பூதாயின மகா அய்யூ (1974), கதசிரிரதா (1977), காடு காடுரி (1979), பரா (1979), ரங்கநாயகி (1981), ஆக்சிடண்ட் (1985), புஷ்பக விமாணா (1987), டபரன கதே (1987), கிருரியா (1996), தாயி சஹிபா (1997), ஏ (1998), மனே (2000), த்வீபா (2002), முங்காரு மனே (2006), தண்டுபால்யா (2012), லூசியா (2013), ரங்கி தரங்கா (2015) தித்தி (2016) போன்றவை ஆகும்.[12][13]

துவக்க வரலாறு

தொகு
 
கன்னட திரைப்பட இயக்குநர் கொன்னப்ப பாகவதர்

1934 இல் வெளியான சதி சுலோக்‌சனா திரைப்படமே கன்னடத்தின் முதல் பேசும் படம்,[14] அதைத் தொடர்ந்து பக்த துருவா (அல்லது துருவா குமார்). சதி சுலோச்சனா படமானது கோலாப்பூரின் சத்ரபதி படப்பிடிப்புத் தளத்தில் படம்பிடிக்கப்பட்டது; பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு, ஒலிப்பதிவு மற்றும் பிந்தைய தயாரிப்புப் பணிகள் சென்னைவில் செய்யப்பட்டன. 1949 ஆம் ஆண்டில், குப்பி வீரண்ணா திரைப்படங்களின் துவக்கக்கால நடிகராக ஹென்னப்ப பகவதர் இருந்தார், அவர் தயாரித்த பக்த கும்பாராவில் பண்டரிபாய் முதன்மைப் பாத்திரத்தில் ஹென்னப்ப பாகவதருடன் இணைந்து நடித்தார். பாகவதர் மீண்டும் ஒரு கன்னடப்படமாக 1955 ஆம் ஆண்டு மகாகவிவி காளிதாசாவை வெளியிட்டார், அதில் அவர் நடிகை சரோஜாதேவியை அறிமுகப்படுத்தினார்.[15]

பிற்காலம்

தொகு

இந்தக் காலகட்டத்தில் கன்னடத் திரைப்படத் துறையில் ராஜ்குமார் புகழ்பெற்றார். அவரது மனைவி பர்வதமா ராஜ்குமார் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான வஜ்ரேஸ்வரி கம்பைன்சை நிறுவினார். வம்சவிருக்‌ஷா, பிரமா கரந்தின் பானியம்மா, காது குடுரி, ஹம்சகீதே, ஆக்சிடன்ட், அக்ரமனா, மூரு தாரிகலு, தபரணா கத்தே, பன்னத வேஷா மற்றும் புட்டண்ணா கனகல்லின் நாகரஹாவு ஆகியவை வெளியிடப்பட்டன. விஷ்ணுவர்தன் மற்றும் அம்பரீஷ் ஆகியோர் நாகரஹாவு திரைப்படத்தில் இருந்து தோன்றிய இரண்டு நட்சத்திரங்கள். ராஜ்குமார் மற்றும் விஷ்ணுவர்தன் இருவரும் கன்னட சினிமாவின் இரண்டு தூண்களாகக் கருதப்படுகிறார்கள்.

சங்கர் நாக் ஒந்தானொந்து காலதல்லி மற்றும் மால்குடி டேஸ் போன்ற படங்களின் வழியாக நட்சத்திரமானார். இதே காலகட்டத்தில் டைகர் பிரபாகர், அனந்த் நாக், லோகேஷ், துவாரகேஷ், அசோக், ஸ்ரீநாத், எம். பி. சங்கர் நாக், சுந்தர் கிருஷ்ணா அர்ஸ் போன்றோருடன் நடிகைகள் கல்பணா, ஆர்த்தி , இலட்சுமி, பத்மா வாசந்தி, கீதா, மகாதேவி, சரிதா, மஞ்சுளா, ஜெயமாலா ஆகிய நடிகைகள் இருந்தனர். 80 களின் பிற்பகுதியில் தோன்றியவர்கள் வி. ரவிச்சந்திரன் மற்றும் சிவ ராஜ்குமார் மற்றும் ரமேஷ் அரவிந்த் இவர்களுடன் பணிபுரிந்த இயக்குநர்கள் ராஜேந்திர சிங் பாபு, டி. ராஜேந்திர பாபு, வி. சோமசேகர், எச். ஆர். பார்கவா, ஸ்ரீ பிரகாஷ், டி. எஸ். நாகபூசணா, லாஜசேகர். இயக்குநர்கள் புட்டண்ணா கனகல் மற்றும் சங்கர் நாக் இறந்துவிட்டனர். பாக்யா, மகாலட்சுமி, சுதா ராணி, தாரா, மாலாஸ்ரீ, அஞ்சலி சுதாகர், வணிதா வாசு, அஞ்சணா, சுருதி ஆகியோர் இக்காலகட்டத்தில் குறிப்பிடக்கூடிய நடிகைகள் ஆவர்.

தற்போது தர்ஷன் சுதீப், புனீத் ராச்குமார், யாஷ், கணேஷ், உபேந்திரா, ரக்‌ஷித் செட்டி, விஜய் ராகவேந்திரா, ஸ்ரீமுரளி, சிரஞ்சீவி சர்ஜா போன்ற நடிகர்கள் கன்னடத் திரையுலகில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். கதாநாயகிகளாக ரக்‌ஷிதா பண்டிட், ரஷ்மிகா மந்தன்னா, ஷன்வி ஸ்ரீவத்சவா, ரம்யா, ரச்சிதா ராம் ஆகியோர் உள்ளனர்.

பிற விருதுகள்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. List of Kannada films of 2014
  2. 2.0 2.1 "The Digital March Media & Entertainment in South India" (PDF). Deloitte. பார்க்கப்பட்ட நாள் 21 April 2014.
  3. [1] Link referring rechristening of sandalwod as chandanavana at world kannada summit
  4. When it rained films. Deccanherald.com. Retrieved on 2013-07-29.
  5. "Statewise number of single screens" பரணிடப்பட்டது 2014-09-12 at the வந்தவழி இயந்திரம். chitraloka.com (1913-05-03). Retrieved on 2013-07-29.
  6. Shampa Banerjee, Anil Srivastava (1988) [1988]. One Hundred Indian Feature Films: An Annotated Filmography. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8240-9483-2. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author= and |last= specified (help)
  7. "GFTI". Archived from the original on 21 August 2014. பார்க்கப்பட்ட நாள் 22 August 2014.
  8. "Tikkavarapu Pattabhirama Reddy – Poet, Film maker of international fame from Nellore - 1Nellore.com". Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2018-04-13.
  9. "Asiatic Film Mediale". asiaticafilmmediale.it. Archived from the original on 16 November 2008. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  10. "Girish Kasaravalli to be felicitated". தி இந்து. 25 April 2011. பார்க்கப்பட்ட நாள் 25 March 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  11. "A genius of theatre". The Frontline. 12–25 October 2002. Archived from the original on 2008-12-06. பார்க்கப்பட்ட நாள் 2009-03-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  12. "100 Years of Indian Cinema: The 100 greatest Indian films of all time". IBNLive.
  13. Raghavendra, M. K. (29 June 2017). "Ten Landmark Films Of Kannada Cinema You Can Watch Now". Film Companion (filmcompanion.in). http://www.filmcompanion.in/article/ten-landmark-films-of-kannada-cinema. பார்த்த நாள்: 14 November 2017. 
  14. "First film to talk in Kannada" பரணிடப்பட்டது 2007-01-05 at the வந்தவழி இயந்திரம் article in The Hindu
  15. K. Moti Gokulsing; Wimal Dissanayake (17 April 2013). Routledge Handbook of Indian Cinemas. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-77284-9. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author1= and |last= specified (help); More than one of |author2= and |last2= specified (help)
  16. "Bengaluru International Film Festival - BIFFES". Bengaluru International Film Festival.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னடத்_திரைப்படத்துறை&oldid=3841805" இலிருந்து மீள்விக்கப்பட்டது