கன்னத்தில் முத்தமிட்டால்

மணிரத்னம் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கன்னத்தில் முத்தமிட்டால் (Kannathil Muthamittal) 2002இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம், இலங்கை இனப் பிரச்சனையை கதைக்கருவாகக் கொண்டிருந்தது[1]. இது இந்திய இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த தமிழ் படம்.

கன்னத்தில் முத்தமிட்டால்
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்னம்
ஜி. சிறீனிவாசன்
கதைமணிரத்னம்
சுஜாதா
இசைஏ.ஆர்.ரஹ்மான்
நடிப்புமாதவன்
சிம்ரன்
நந்திதா தாஸ்
பி. எஸ். கீர்த்தனா
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுரவி கே. சந்திரன்
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு2002
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நாடகப்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

எம்.டி.சியாமா (நந்திதா தாஸ்) இலங்கையில் தனது கணவனுடன் வசித்து வருகிறார். அப்போது போர் நடக்கும் எச்சரிக்கை வருகிறது. அப்போது அவர்கள் படகில் ஏற்றிவிடப்பட்டு ராமேஷ்வரம் செல்கிறார்கள். தனது கணவன் இலங்கை இராணுவத்திடம் மாட்டிக் கொண்டதால் தன்னுடன் தன் கணவனை அழைத்து செல்ல முடியாத அவள் தனியாக செல்கிறாள். ராமேஷ்வரத்தில் அகதிகள் முகாமில் அவளுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த பெண் குழந்தையை திருச்செல்வமும் (மாதவன்) இந்திராவும் (சிம்ரன்) தத்தெடுத்துக் கொள்கின்றனர். இக்குழந்தை உரிய வயதை எய்தியதும் பெற்றோர்கள் இவளிடம் தத்தெடுக்கப்பட்ட விபரத்தைக் கூற, இவள் பல விதமான உணர்ச்சித் தத்தளிப்புகளுக்கு ஆளாகிறாள். தன் பிறப்புத் தாயைக் காண இவள் பேரவா கொள்வதால், இவள் பெற்றோர் இவளை இலங்கைக்கு அழைத்துச் செல்கின்றனர். பெருமுயற்சிக்குப் பின் அவள் தாய் விடுதலைப்புலி போராளி என அறிந்து அவளைச் சந்திக்கின்றனர். தன் தாயை இவள் அமைதி நிலவும் தமிழகத்துக்கு அழைக்கின்றாள். தாய் மறுத்து விடுகின்றாள்.

பாடல்கள்

தொகு

விடை கொடு எங்கள் நாடே

தொகு
"விடை கொடு எங்கள் நாடே"
ஒலிச்சுவடு பாடலை பாடியவர்கள் ஏ. ஆர். ரகுமான்
பல்ராம்
எம். எஸ். விஸ்வநாதன்
பெபி மணி
ரெகனா

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்திலிருந்து

வெளிவந்த ஆண்டு 2002
வகை ஒலிச்சுவடு
பாடும் நேரம் 5.10
பாடலாசிரியர் வைரமுத்து
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்

இப்பாடலின் வரிகளை வைரமுத்து எழுத, ஏ. ஆர். ரகுமான் இசையில், ஏ. ஆர். ரகுமான், எம். எஸ். விஸ்வநாதன் உள்ளிட்டோர் பாடினார்கள்.

விருதுகள்

தொகு

2003 ஜெருசலேம் திரைப்பட விழா

 • வென்ற விருது - சுதந்திரத்திற்கான சக்தி விருது

2003 லாஸ் ஏஞ்சல்ஸ் இந்தியத் திரைப்பட விழா (அமெரிக்கா)

 • வென்ற விருது - மக்கள் விருது - சிறந்த திரைப்படம் - மணிரத்னம்

2003 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

 • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒலிப்பதிவு - எ.எஸ் லக்ஸ்மி நாராயனன்
 • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த தொகுப்பு - எ.சிறீகர் பிரசாத்
 • வென்ற விருது- சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த சிறு நட்சத்திரம் - பி.எஸ் கீர்த்தனா
 • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்
 • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து
 • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டாரத் திரைப்படம் (தமிழ்) - கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்

2004 ரிவர்ரன் சர்வதேச திரைப்பட விழா (அமெரிக்கா)

 • வென்ற விருது - மக்கள் விருது - சிறந்த திரைப்படம் - கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்

2004 நியூ ஹவன் திரைப்பட விழா (அமெரிக்கா)

 • வென்ற விருது - சிறப்பான விருது- கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்
 • வென்ற விருது - சர்வதேச திரைப்படங்கள் - முதல் இடம்- கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்
 • வென்ற விருது - மக்கள் விருது-சிறந்த வேற்று மொழிப்படம் - கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்2004

வெஸ்ட்செஸ்டர் திரைப்பட விழா (அமெரிக்கா)

 • வென்ற விருது - சிறந்த சர்வதேச திரைப்படம் - கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்

2003 சிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழா (சிம்பாப்வே)

 • வென்ற விருது - சிறந்த திரைப்படம் -

மேற்கோள்

தொகு
 1. "Wistful after V-Day". தி இந்து. 16 பிப்ரவரி 2002 இம் மூலத்தில் இருந்து 2004-11-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041130053531/http://www.hindu.com/thehindu/lf/2002/02/16/stories/2002021600230200.htm.