கன்னம் தூக்கல்

கன்னம் தூக்கல் என்பது சங்ககாலத்தில் வேலன் குறி சொல்லப் பயன்படுத்தும் ஓர் உத்தி. இது பற்றிச் சில சங்கப்பாடல்கள் கூறுகின்றன. வேலன் என்பவன் முருகன் பெயரால் சாமியாடிக் குறி சொல்பவன். இவன் குறி சொல்லக் கழங்குக் காய்களையும், கன்னம் என்னும் கோலையும் பயன்படுத்துவான். கன்னக்கோலுக்குப் பொன் பூண் கட்டப்பட்டிருக்கும். இதனைக் குறி சொல்லப்படுபவர் உடம்பின்மேல் தூக்கி ஆடச்செய்வான். இதற்குக் கன்னம் தூக்கல் என்று பெயர். அது ஆடுவதை வைத்துக்கொண்டு குறி சொல்லுவான். எப்படியும் அவன் குறிசொல்லப்படுபவர் மேல் முருகு ஏறிக்கொண்டிருக்கிறான் எனச் சொல்வதாகவே முடியும். இது ஒரு மாய விளையாட்டு.[1][2][3]

அடிக்குறிப்பு

தொகு
  1. பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி
    நுண்கோல் அறை குறைந்து உதிர்வன போல
    அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
    ஓங்குசினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப (அகநானூறு 317)
  2. ஊர்முது வேலன் கழங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி முருகு என மொழியும் ஐங்குறுநூறு 245
  3. பொன்னகர் வரைப்பில் கன்னம் தூக்கி முருகு என மொழியும் ஐங்குறுநூறு 247
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னம்_தூக்கல்&oldid=1278975" இலிருந்து மீள்விக்கப்பட்டது