கபினி பாலம்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பாலம்

கபினி பாலம் (Kabini bridge) இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பாலமாகும். 1730 ஆம் ஆண்டில் கபினி ஆற்றின் குறுக்கே, உள்ளூர் தலைவர் தளவாய் தேவ்ராசுவால் கபினி பாலம் கட்டப்பட்டது. 1899 ஆம் ஆண்டில் நஞ்சங்கூடுடன் மைசூர் நகரத்தை இணைக்கும் குற்றகலப் பாதை இணைப்பாக இப்பாலம் அமைக்கப்பட்டது. 225 மீட்டர் நீளத்துடன் 56 தூண்கள் பொறுத்தப்பட்டு கோதிக் பாணியில் கபினி பாலம் கட்டப்பட்டுள்ளது. கடைசியாக 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17 ஆம் தேதியன்று குற்றகலப் பாதை இரயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு பாலத்தில் போக்குவரத்துக்கு மூடப்பட்டது.[1]

கபினி பாலம்

தென்மேற்கு இரயில்வேயின் மைசூர் கோட்டம், கபினி பாலத்தை சீரமைக்கப் போவதாக கூறியுள்ளது.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "285-year-old Kabini rail-cum-road bridge near Nanjangud to get facelift". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-10-04. பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
  2. "Railways to give facelift to historic Kabini Bridge in Nanjangud". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-04. பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
  3. "Heritage bridge across Kapila to be conserved" (in en-IN). The Hindu. 2020-10-02. https://www.thehindu.com/news/national/karnataka/heritage-bridge-across-kapila-to-be-conserved/article32755224.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபினி_பாலம்&oldid=3578769" இலிருந்து மீள்விக்கப்பட்டது