கபீர் கலா மஞ்ச்
கபீர் கலா மஞ்ச் (Kabir Kala Manch) என்பது 1992 ல் குசராத் கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவின் மகாராட்டிராவின் புனேவில் உருவாக்கப்பட்ட ஒரு கலாச்சார அமைப்பாகும். இது இசை, கவிதை மற்றும் நாடகம் மூலம், சாதி எதிர்ப்பு, ஜனநாயக சார்பு செய்தியை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. [1] சேரிகள் மற்றும் தெருக்களில் எதிர்ப்பு கவிதை மற்றும் நாடகங்களை நிகழ்த்தும் மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
சுருக்கம் | கேகேஎம் |
---|---|
உருவாக்கம் | 1992 |
வகை | கலாச்சார அமைப்பு |
தலைமையகம் | புனே, மகாராட்டிரம், இந்தியா |
தலைமையகம் | |
சேவை பகுதி | மகாராட்டிரம் |
ஆட்சி மொழி | மராத்தி, இந்தி |
வரலாறு
தொகு1992 குசஜராத் கலவரத்திற்குப் பிறகு,[1],மாணவர்கள் ஒரு குழு ஒன்று கூடி கபீர் கலா மன்ச் என்ற கலாச்சாரக் குழுவை உருவாக்கியது. இது அவர்களின் இசை மற்றும் கவிதை மூலம் சமூக சமத்துவமின்மை, அடித்தட்டு மக்களின் சுரண்டல், உழவர் தற்கொலை, பெண் சிசுக்கொலை, தலித் கொலைகள் மற்றும் ஊழலின் பரந்த வலையை கருப்பொருளாக எடுத்துக் கொண்டது. [சான்று தேவை]
கபீர் கலா மஞ்சின் சில நிகழ்ச்சிகளை ஆனந்த் பட்வர்தன் தனது ஜெய் பீம் காம்ரேட் என்ற ஆவணப்படத்தின் மூலம் இடம்பெற செய்துள்ளார். [2][3]
நக்சலைட் இணைப்புகளின் குற்றச்சாட்டுகள்
தொகுகபீர் கலா மஞ்ச் குழுவின் ஆர்வலர்கள் மகாராட்டிரா அரசாங்கத்தால் " மாவோயிஸ்டுகள்" மற்றும் " "நக்சலைட்டுகள்" என்று சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 2011 மேஇல், மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் சித்தாந்தத்தை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்புப் படை நடத்திய தாக்குதல் சீத்தல் சாத்தே மற்றும் கபீர் கலா மஞ்சின் மற்ற உறுப்பினர்கள் தலைமறைவாக வழிவகுத்தது. [4][5]
தலைமறைவாக இருந்த இதன் உறுப்பினரான சீத்தல் சாத்தே மற்றும் அவரது கணவர் சச்சின் மாலே ஆகியோர் 2013 ஏப்ரல் 2 அன்று, மும்பை காவல்துறையினரிடம் சரணடைந்தனர். அதே நேரத்தில் அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்து தங்களை நிரபராதிகள் என்று தக்க வைத்துக் கொண்டு, தாங்கள் "சரணடையவில்லை" என்றும் வலியுறுத்தினர். [6] கபீர் கலா மஞ்ச்சின் உறுப்பினர்களில் இருவரான தீபக் தெங்கிள் மற்றும் சித்தார்த் ஆகியோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. [7] ஆனால் கர்ப்பமாக இருந்தபோதிலும், சீத்தலுக்கும், அவரது கணவருக்கும் உடனடியாக, மீண்டும் 2013 சூன் 4 அன்று மும்பை அமர்வு நீதிமன்றம் பிணை தர மறுத்தது. [8][9] மனிதாபிமான அடிப்படையில் 2013 சூன் 28 அன்று பம்பாய் உயர்நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. [10] 2017 சனவரி 3 அன்று, கைது செய்யப்பட்ட குழுவின் மீதமுள்ள உறுப்பினர்களான சச்சின் மாலி, சாகர் கோர்கே மற்றும் ரமேஷ் கெய்சோர் ஆகியோருக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.[11]
தாக்குதல்
தொகுபுனேயின் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேசிய திரைப்பட ஆவணக் காப்பக நிகழ்ச்சியின் பின்னர் கபீர் கலா மஞ்ச்சின் உறுப்பினர்கள் மற்றும் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் அகில பாரத வித்யார்த்தி பரிசத்தின் உறுப்பினர்களால் தாக்கப்பட்டனர். [12]
சீத்தல் சாத்தே
தொகுசீத்தல் சாத்தே மகாராட்டிராவின் புனேவைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற பாடகரும், கவிஞரும் மற்றும் தலித் உரிமை ஆர்வலரும் ஆவார். இவர் 2000களின் நடுப்பகுதியில் கபீர் கலா மஞ்சின் முன்னணி பாடகர்களில் ஒருவராக முக்கியத்துவம் பெற்றார்.
2007 ஆம் ஆண்டு ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்தன், கபீர் கலா மஞ்ச் நிகழ்ச்சிகளை படமாக்கி, 1997 ஆம் ஆண்டில் மும்பையின் ரமாபாய் நகரில் நடந்த காவல் கொலைகளிலிருந்து உருவான சாதி பதட்டங்கள் மற்றும் வன்முறைகள் பற்றிய திரைப்படமான ஜெய் பீம் காம்ரேட் என்ற ஆவணப்படத்திற்கான காட்சிகளை சேகரிக்கும் போது சாத்தேவை விரிவாக பேட்டி கண்டு, ஜெய் பீம் காம்ரேட் என்பதை இறுதியாக வெளியிடப்பட்டார். 2011ஆம் ஆண்டில், பட்வர்தனின் கூற்றுப்படி, "சீத்தலைப் போன்றவர்கள் மீண்டும் பொதுவெளியில் வந்து தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க முடியும், சக்தியற்றவர்களுக்காகப் பேசுவதைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்றார்.[13][3] இந்தியாவைச் சுற்றியுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் திரையிடப்பட்ட இந்தப் படம், சாத்தேவின் இசையையும் செய்தியையும் மகாராட்டிராவுக்கு வெளியே பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. [சான்று தேவை]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Kabir Kala Manch creates awareness through dramatics". DNA India. 28 March 2010. http://www.dnaindia.com/mumbai/report-kabir-kala-manch-creates-awareness-through-dramatics-1364274.
- ↑ "A film with a difference". The Hindu. 28 January 2012. http://www.thehindu.com/features/cinema/a-film-with-a-difference/article2836663.ece.
- ↑ 3.0 3.1 "A Song that will be Sung". Tehelka. 28 April 2012 இம் மூலத்தில் இருந்து 16 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150716151149/http://www.tehelka.com/a-song-that-will-be-sung/.
- ↑ "Former FC girl student, now wanted for ‘Maoist’ links". Indian Express. 11 April 2012. http://www.indianexpress.com/news/former-fc-girl-student-now-wanted-for--maoist--links/935344/1.
- ↑ "The thin line between dissent and rebellion : Why is a radical Dalit cultural group and its members being persecuted in Maharashtra?". Tehelka. 20 April 2013 இம் மூலத்தில் இருந்து 6 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141106173049/http://www.tehelka.com/the-thin-line-between-dissent-and-rebellion/.
- ↑ "Democracy needs their song". The Hindu. 5 May 2013. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/democracy-needs-their-song/article4685102.ece.
- ↑ "Two activists suspected to be naxals by ATS surrender near Vidhan Bhavan". Hindustan Times. 3 April 2013 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141107002216/http://www.hindustantimes.com/India-news/Mumbai/Two-activists-suspected-to-be-naxals-by-ATS-surrender-near-Vidhan-Bhavan/Article1-1036458.aspx.
- ↑ "Why is this woman still in jail?". Tehelka. 15 June 2013 இம் மூலத்தில் இருந்து 6 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141106173359/http://www.tehelka.com/why-is-this-woman-still-in-jail-2/.
- ↑ "Pregnant ‘Maoist sympathiser’ denied bail". Indian Express. 5 June 2013. http://www.indianexpress.com/news/pregnant--maoist-sympathiser--denied-bail/1125083/.
- ↑ "HC grants bail to suspected Naxal Sheetal Sathe". DNA India. 28 June 2013. http://www.dnaindia.com/mumbai/1854250/report-hc-grants-bail-to-suspected-naxal-sheetal-sathe.
- ↑ "After Three Years in Jail, India's 'Most Dangerous' Singers Finally Make Bail". The Wire. https://thewire.in/91550/kabir-kala-manch-members-bail-sc/.
- ↑ "ABVP thrashes FTII student for not saying ‘Jai Narendra Modi’". The Hindu. 24 August 2013. http://www.thehindu.com/news/national/other-states/abvp-thrashes-ftii-student-for-not-saying-jai-narendra-modi/article5053110.ece.
- ↑ "A film with a difference". The Hindu. 28 January 2012. http://www.thehindu.com/features/cinema/a-film-with-a-difference/article2836663.ece.