கப்பல் மணி
கப்பல் மணி என்பது கப்பலில் நேரத்தைக் குறிக்கப் பயன்படுகிறது, மேலும் மாலுமிகள் இதன்மூலம் தங்கள் பணி கடிகாரத்தை சரி செய்து கொள்ளவும் உதவுகிறது. பொதுவாக இது பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படுகிறது, மேலும் இதில் கப்பலின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். பாரம்பரியமாக கப்பலின் சமையல்காரர் அல்லது அவரின் பணியாளர்கள் கப்பலின் மணியை ஒலிக்கச் செய்யும் பணியைப் பெற்றிருப்பார்கள்.