கமல்பிரீத் கவுர்
கமல்பிரீத் கவுர் (Kamalpreet Kaur) இந்தியாவைச் சேர்ந்த வட்டெறியும் விளையாட்டு வீராங்கனையாவார். 1996 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 அன்று இவர் பிறந்தார். டோக்கியோவில் நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3][4]
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர், பஞ்சாப் |
பிறப்பு | 4 மார்ச்சு 1996 பட்டியாலா, பஞ்சாப் |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | வட்டெறிதல் (விளையாட்டு) |
சாதனைகளும் விருதுகளும் | |
தனிப்பட்ட சாதனை(கள்) | 66.59m (2021) பட்டியல் |
கமல்பிரீத் கவுர் தனது சொந்த தேசிய சாதனையை 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டமைப்பு கோப்பைக்கான போட்டிகளின் போது முறியடித்தார். 2021 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் தேதி பாட்டியாலாவின் என்ஐஎசு நகரில் நடைபெற்ற நான்காவது இந்திய கிராண்ட் பிரிக்சு பெண்கள் வட்டெறியும் போட்டியில் 66.59 மீ. தொலைவுக்கு வட்டெறிந்து இவர் சாதனை புரிந்தார்.[5] முன்னதாக இவர் இதே ஆண்டின் மார்ச்சு மாதத்தில் 65.06 மீட்டர் தொலைவுக்கு வட்டெறிந்து சாதனை புரிந்தார்.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்
தொகு32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 9வது நாளான 31 சூலை 2021 அன்று நடந்த மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூரம் வட்டு எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kamalpreet Kaur qualifies for Tokyo Olympics, breaks national record in women's discus throw". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 May 2021. பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
- ↑ "WHO IS KAMALPREET KAUR? - INDIA'S LATEST DISCUS THROW SENSATION". Samrat Chakraborty. Olympics.com. 20 March 2021. பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
- ↑ "Kamalpreet Kaur lights up final day with record-breaking discus throw". Andrew Amsan. The Indian Express. 20 March 2021. பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
- ↑ "Kamalpreet KAUR". World Athletics. பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ https://www.news18.com/news/sports/discus-thrower-kamalpreet-kaur-breaks-her-own-national-record-at-indian-grand-prix-iv-3874424.html
- ↑ டோக்கியோ ஒலிம்பிக்; வட்டு எறிதல் இறுதி போட்டிக்கு கமல்பிரீத் கவுர் தகுதி