கமல் பசதி

கர்நாடகாவின் பெல்காம் நகரில் உள்ள ஒரு சமணர் கோவில்

கமல் பசதி என்பது கர்நாடகாவின் பெல்காம் நகரில் உள்ள பெல்காம் கோட்டைக்குள் அமைந்துள்ள ஒரு சமணர் கோவில் ஆகும். [1]

{{{building_name}}}
கமல் பசதி
கமல் பசதி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பெல்காம், கர்நாடகா
புவியியல் ஆள்கூறுகள்15°51′29″N 74°31′17″E / 15.85806°N 74.52139°E / 15.85806; 74.52139
சமயம்சமணம்

கமல் பசதியானது பிர்ச்சிராஜாவால் (Birchiraja) கட்டப்பட்டது. இவர் ஜெய ராயா என்றும் அழைக்கப்படுகிறார். [2] கி.பி. 1204 ஆம் ஆண்டில் ராட்டா வம்சத்தின் நான்காம் கார்த்தவீர்யாவின் [3] அரசவையில் ஒரு அதிகாரியாக இருந்தவர். சுபச்சந்திரபட்டாரகதேவா என்ற ஜெயின் துறவியின் வழிகாட்டுதலின் கீழ் இக்கோவில் கட்டப்பட்டது.[4] கார்த்தவீர்யதேவா மற்றும் யுவராஜகுமார மல்லிகார்ஜுனதேவா ஆகியோர், [5] கி.பி.1205 ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட ஒரு கல்வெட்டு படி, இந்தக் கோவிலின் கட்டிடக்கலைஞர்கள் ஆவர்.

கட்டிடக்கலை

தொகு
 
கூரை

கமல் பசதியின் மையக் கூரை குவிமாடத்தில் தாமரை மலர் செதுக்கப்பட்டதால் "கமல்" என்ற பெயரைப் பெற்றது. [6] [7] [8] குவிமாட தாமரையில் 72 இதழ்கள் உள்ளன. இது கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தின் 24 தீர்த்தங்கரர்களைக் குறிக்கிறது. கோவிலின் சுவர்களில் நுணுக்கமான வடிவமைப்புகள், விளிம்பு அழகணிகள் மற்றும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. [9] கோவில் சுவரின் ஒவ்வொரு போதிகை முடிவிலும் ஒரு நாகப்பாம்பின் சிற்பத்துடன் கூடிய தூண் தாங்குகிறது. தூண்கள் நன்கு செதுக்கி அலங்காரிக்கப்பட்டு நேர்த்தியாக மெருகூட்டப்பட்டுள்ளன. கருவறை வாசல் நன்கு செதுக்கப்பட்டுள்ளது. [10]

மொத்தம் ஐந்து சிறிய கருவறைகளில் தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன; இந்த கருவறைகளுக்கு இடையே ஒரு சிறிய விதானத்தின் கீழ் நிற்கும் நிலையில் நான்கு யட்சர்களும் மற்றும் யட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளனர். கருவறையின் உள்ளே இருக்கும் தூண்கள் மிகப்பெரிதாகவும் சதுரமாகவும் உள்ளன. கதவின் இருபுறமும் உள்ள சுவர் மாடங்களில் சமண தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. [6] இக்கோவிலின் முகமண்டபம் ஒரு கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. கோவிலின் மூலவர் நேமிநாதர் கருப்பு நிற சிலையாக வடிக்கப்பட்டுள்ளார். [2] கோவிலில் ரிஷபநாதர் பத்மாசனத்திலும், சுமதிநாதர் கயோத்சர்க தோரணையிலும் மற்றும் பார்சுவநாதர் ஏழு தலை நாகத்துடனும் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளனர். ஒன்பது தீர்த்தங்கரர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நவக்கிரகத்தின் ஒற்றைக்கல் சிலையும் இந்த கோவிலில் இடம்பெற்றுள்ளது. [9]

கமல் பசதிக்கு அருகில் சிக்கி பசதி மற்றும் பூசாரி இல்லம் உள்ளது. [11]

பிரபலமான கலாச்சாரத்தில்

தொகு

கமல் பசதியின் 816வது ஆண்டு நினைவாக [3] டிசம்பர் 2020 அன்று சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:Jain temples

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_பசதி&oldid=3760890" இலிருந்து மீள்விக்கப்பட்டது