கம்பைநல்லூர் தேசிநாதீசுவரர் கோயில்

கம்பைநல்லூர் தேசிநாதீசுவரர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலாகும்.

கோயிலின் வரலாறு

தொகு

சோழர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு கீழ்பட்ட அரசனாக 13 ஆம் நூற்றாண்டில் தகடூரை ஆட்சிபுரிந்தர் அதியமான் மரபைச் சேர்ந்த விடுகாதழகிய பெருமாள். அவர் கம்பைநல்லூரில் கோட்டை கட்டி ஆண்டுவந்தார். அவரால் அவரின் கோட்டையில் கட்டப்பட்டதே இக்கோயில்.

கோயிலமைப்பு

தொகு

இக்கோயில் கம்பை நல்லூர் ஊரின் வடகிழக்கே உள்ளது. இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், முன்மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட கற்றளி ஆகும். அம்மனுக்கு தனிக்கோயில் இல்லாமல் மகாமண்டபத்திலேயே சௌந்தராம்பாள் என்ற பெயரில் உள்ளார். இக்கோயில் விமானம் மூன்று நிலைகளுடன் உள்ளது. [1]

மேறகோள்கள்

தொகு
  1. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். p. 175.