கயந்தலை
கயந்தலை (ⓘ) என்னும் சொல்லானது பெரிய தலையைக் குறிக்கும். யானைகளில் பெண்யானைகளின் தலை ஆண் யானையின் தலையை விடச் சற்று பெரிதாக இருக்கும். எனவே பெண்யானைகளைக் கயந்தலை மடப்பிடி என முன்னோர் வழங்கினர். அன்றியும் குட்டி யானைகளின் தலையும் அதன் அளவை நோக்கச் சற்றே பெரிது. எனவே அவற்றையும் கயந்தலை என்றனர். மேலும் மக்கள் பெறும் குழந்தைகளின் தலையும் அவ்வாறே சற்று பெரிது. எனவே குழந்தைகளையும் அவ்வாறே கயந்தலை என்றனர்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி - தொல்காப்பியம் கற்பியல் 6
- ↑ வையையில் நீராடச் சென்ற நிலத்திணை காட்டும் ஒப்பனை செய்யப்பட்டுள்ள புதல்வர் - வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்
கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ, - பரிபாடல் 16 - ↑ அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும் - புறநானூறு 325 - ↑ வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந் தலை,
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்,
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் - புறநானூறு 324 - ↑ கயந் தலைக் குழவி சேரி அம் பெண்டிர்
கயந்தலைக் குழவி - நற்றிணை 171 - ↑ மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை! - பரிபாடல் 5
- ↑ அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி, - பரிபாடல் 15 - ↑ துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ - கலித்தொகை 11 - ↑ கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி,
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு - அகநானூறு 121 - ↑ முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி, - குறுந்தொகை 394 - ↑ கயந்தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
களிறு விளிப்படுத்த கம்பலை - அகநானூறு 165 - ↑ கயந்தலை மடப் பிடி புலம்ப - புறநானூறு 303