கரிசலாங்கண்ணி

காம்.(com)மூலிகைமுற்றம்.தாவரவியல்பெயர்((((தினம் ஒரு மூலிகை -!- கரிசலாங்கண்ணிக்கீரை
False Daisy
Starr 030807-0168 Eclipta prostrata.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவர இனம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Asterales
குடும்பம்: Asteraceae
பேரினம்: Eclipta
இனம்: E. alba
இருசொற் பெயரீடு
Eclipta alba
மஞ்சள் கரிசலாங்கண்ணி
வெள்ளை கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை அல்லது கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளைக் கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.

பெயர்கள்தொகு

இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உண்டு. கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர் பெற்றது.[1]

காணப்படும் நாடுகள்தொகு

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை எனப் போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை எனப் பாராட்டப் படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:

 • நீர்=85%
 • மாவுப்பொருள்=9.2%
 • புரதம்=4.4%
 • கொழுப்பு=0.8%
 • கால்சியம்=62 யூனிட்
 • இரும்புத் தாது=8.9 யூனிட்
 • பாஸ்பரஸ்=4.62%
 • இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்தொகு

உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும். கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும். உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும். புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும். ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது. விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.

 • மஞ்சள் காமாலை[2][3]
 • மகோதர வியாதி
 • சிறுநீர் எரிச்சல்
 • பெண்களின் பெரும்பாடு
 • குழந்தைகளின் சளி[4] உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

 1. டாக்டர் வி.விக்ரம் குமார் (2019 பெப்ரவரி). "உடம்பை இரும்பாக்கும் கரிசாலை". கட்டரை. இந்து தமிழ். பார்த்த நாள் 24 பெப்ரவரி 2019.
 2. "பல்வேறு நோய்களுக்கு பயனாகும் கரிசலாங்கண்ணி!". பார்த்த நாள் அக்டோபர் 24, 2012.
 3. "கரிசலாங்கண்ணி". மூல முகவரியிலிருந்து 2012-09-24 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் அக்டோபர் 24, 2012.
 4. "கரிசிலாங்கண்ணி". பார்த்த நாள் அக்டோபர் 24, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிசலாங்கண்ணி&oldid=3272045" இருந்து மீள்விக்கப்பட்டது