கருங்குளம்

கருங்குளம் (Karungulam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின், கருங்குளம் ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும் [4][5].

கருங்குளம்
—  கிராமம்  —
கருங்குளம்
இருப்பிடம்: கருங்குளம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°49′N 78°02′E / 8.81°N 78.04°E / 8.81; 78.04ஆள்கூறுகள்: 8°49′N 78°02′E / 8.81°N 78.04°E / 8.81; 78.04
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூரின் சிறப்புதொகு

  • இக் கிராமம் திருநெல்வெலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
  • கோவில்கள்: இங்கு பிரபலமான வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இது வகுளகிரி(Vagulagiri Hill) என்ற மலைமீது அமைந்துள்ளது. சந்தனமரத்தால் செய்யப்பட்டதேர் பிரசித்தி பெற்றது. சித்திரா பௌர்ணமி அன்று கருட்சேவை 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடக்கும். இவ்விழாவிற்கு பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். அதன் பின் 3 நாட்கள் ஜூலை மாதம் பவித்ருட்சவம்(Pavitrotsavam) நடக்கும். மற்றும் சந்தனமாரியம்மன் கோவில், மார்த்தாண்டேஸ்வரர் கோவில், ஐயப்பன் கோவில், விஷ்ணு துர்க்கா கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில் ஆகியன உள்ளது. இங்கு உள்ள மார்த்தாண்டேஸ்வரர் கோவில் கேரளா அரசர் மார்த்தாண்டவர்மன் கட்டியது ஆகும்.நவ(ஒன்பது)துர்கை ஆலயம் இங்கு மட்டுமே அமைந்துள்ளது இது போன்று ஒன்பது துர்க்கைகளை ஒரே ஆலயத்தில் வேறு எங்கும் காண இயலாது.இவ்வாலயத்தில் வழிபாடு செய்தால் திருமணத்தடை அகலும்.இங்கு ஜாதக ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

போக்குவரத்துதொகு

திருநேல்வேலியிலிருந்து 20 கிமீ தொலைவிலில் உள்ள இவ்வூரில் நெல், வாழை போன்ற பயிர் வகைகள் பயிரிடப்படுகிறது. இங்கிருந்து திருச்செந்தூர் 37 கிமீ தூரத்திலும், தூத்துக்குடி 41கிமீ, திருவைகுன்டம் 7கிமீ தூரத்திலும் உள்ளது.

படக் காட்சியகம்தொகு

இதனையும் காண்கதொகு

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Karungulam
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்குளம்&oldid=3355637" இருந்து மீள்விக்கப்பட்டது