கருநாடகம் துடுப்பாட்ட அணி

கருநாடகம் துடுப்பாட்ட அணி (The karnataka cricket team ) என்பது கருநாடகம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இந்த அணி ரஞ்சிக் கோப்பை தொடர்களில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக மைசூர் துடுப்பாட்ட அணி என அறியப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சையது முஷ்டாக் கோப்பையில் வெற்றி பெற்றது.[1]

கருநாடகம் துடுப்பாட்ட அணி
Chinnaswamystadium.jpg
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்மணீஷ் பாண்டே
பயிற்றுநர்இயர் குட்
உரிமையாளர்கருநாடகத் துடுப்பாட்ட வாரியம்
அணித் தகவல்
உருவாக்கம்1933
உள்ளக அரங்கம்எம். சின்னசுவாமி அரங்கம்
கொள்ளளவு40,000
வரலாறு
Ranji Trophy வெற்றிகள்8
Irani Trophy வெற்றிகள்6
Vijay Hazare Trophy வெற்றிகள்3
Syed Mushtaq Ali Trophy வெற்றிகள்1
அதிகாரபூர்வ இணையதளம்:KSCA

ரஞ்சிக் கோப்பையில்தொகு

ஆண்டு இடம் தலைவர் எதிரணி இராணி கோப்பை
1941-42 இரண்டாம் இடம் சபி தரஷா மும்பை --
1959-60 இரண்டாம் இடம் வாசுதேவ மூர்த்தி மும்பை --
1973-74 முதல் இடம் பிரசன்னா ராசத்தான் ஆம்
1974-75 இரண்டாம் இடம் பிரசன்னா மும்பை --
1977-78 முதல் இடம் பிரசன்னா உத்தரப் பிரதேசம் இல்லை
1978-79 இரண்டாம் இடம் விஸ்வநாத் தில்லி --
1981-82 இரண்டாம் இடம் விஸ்வநாத் தில்லி --
1982-83 முதல் இடம் பிரிஜேஷ் படேல் மும்பை ஆம்
1995-96 முதல் இடம் அனில் கும்ப்ளே தமிழ்நாடு ஆம்
1997-98 முதல் இடம் ராகுல் திராவிட் உத்தரப் பிரதேசம் ஆம்
1998-99 முதல் இடம் சுனில் ஜோசி மத்தியப்பிரதேசம் இல்லை
2009-10 இரண்டாம் இடம் ராபின் உத்தப்பா மும்பை --
2013-14 முதல் இடம் வினய் குமார் மகாராட்டிரம் ஆம்
2014-15 முதல் இடம் வினய் குமார் தமிழ்நாடு ஆம்

சான்றுகள்தொகு

  1. சையது முஷ்டாக் இறுதிப் போட்டி