கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயில்

கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாநகரின் பகுதியாக உள்ள கருமண்டபத்தில் அமைந்துள்ள கோயிலாகும். [1]

தல வரலாறு

தொகு

தஞ்சாவூர் அருகேயுள்ள இளங்காடு எனும் ஊரில் மாரியம்மன் இருந்தார். அவ்வூரில் தன்னுடைய ஊரில் சரியான இடமின்றி இருந்ததால் மூத்த சகோதரியான சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டாள், சமயபுரத்தாள் பழநிக்குச் செல்லும் பக்தர்கள் காவடி ஏந்திச் செல்வார்கள். அவர்களுடன் செல், காளியும், ஒன்டி கருப்பும் உன்னை வழிமறிக்கும் பகுதியில் தங்கிடு என்றாள். திருச்சிராப்பள்ளி அருகே கருமண்டத்திற்கு வந்தபோது, காளியும், ஒன்டி கருப்பும் வழி மறைத்தனர். எனவே அவ்விடத்திலேயே இளங்காட்டு மாரியம்மன் கோயில் கொண்டார்,

கிழக்கினை நோக்கிய கற்கோயிலாக இது அமைந்துள்ளது. வாசலின் அருகே கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தின் மேலும், மேற்கு பிரகாரத்தில் பிள்ளையார், நாகர்கள் சன்னதியும் அமைந்துள்ளன. வடக்கு பிரகாரத்தில் விஷ்ணு துர்க்கையின் சன்னதி அமைந்துள்ளது. வடகிழக்கில் நவகிரகத்திற்கு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இளங்காட்டு மாரியம்மன் நான்கு கரங்களுடன் உள்ளார்.

விழாக்கள்

தொகு
  • வைகாசி மாதம் வளர்பிறை முதல் ஞாயிறு அன்று பத்துநாள் திருவிழா தொடங்குகிறது.
  • ஆடிப்பூரம்

சிறப்பு

தொகு

இங்கு ஆடிப்பூரம் அன்று ஒரு லட்சம் வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் நடைபெறுகிறது. மூன்று நாட்களுக்குப் பின்பு இந்த வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகின்றன.

ஆதாரங்கள்

தொகு
  1. வேண்டுதல் நிறைவேற ரோஜாப்பூ மாலை- குமுதம் பக்தி ஸ்பெசல் - 14.07.2016 பக்கம் 44