கருவத்தூர் ஸ்ரீராமசுவாமி கோயில்

கருவத்தூர் ஸ்ரீராமசுவாமி கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் வேலூர் ஊராட்சியில் குருமால்தேசத்தில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயில் குருமால் ஸ்ரீ பகவதி கோயிலுக்கு அருகில் உள்ளது. இரண்டு கோயில்களும் கொச்சி தேவஸ்வம் வாரியத்தின் கீழ் செயல்படுகின்றன. [1] கருவத்தூர் கோயில், இக்கோயில் மரு மரக்கால் போராட்டம் [2] நடந்த வெங்கிலச்சேரி மணிமலர்காவு கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது, கும்ப பரணி - குதிரை வேளை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குருரம்மா கோயில் [3] கிருஷ்ணரின் கதையுடன் தொடர்புடையதாகும். கருவத்தூர் கோயிலில் தற்போது திருப்பணி[தொடர்பிழந்த இணைப்பு] [4] நடைபெற்று வருகிறது.

முகப்புத்தோற்றம்

வரலாறு

தொகு

இக்கோயிலின் சரியான வரலாறு இன்னும் அறியப்படவில்லை. எனினும்இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் ஆழ்வாஞ்சேரி மனையின் உரிமையில் இருந்த இக்கோயில் பின்னர் கீரலூர் தேசத்தின் அவனபரம்பு மனை[5]யிடம் ஒப்படைக்கப்பட்டது.

புராணம்

தொகு

இந்து புராணங்களின்படி, விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக ராமர் கருதப்படுகிறார். அசுர சக்திகளைக் கொன்று தர்மத்தை மீட்டெடுக்கும் எண்ணத்துடன் விஷ்ணு ராமராக அவதாரம் எடுத்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். அந்த வகையில் வால்மீகி முனிவரின் ராமாயணம் மூலமாக ராமரின் கதை உலகப் புகழ் பெற்றது. இக்கோயில் கோயில் அசுர சக்திகளை வென்று அரியணை ஏறிய ராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் செவ்வக வடிவில் குவிமாடத்துடன் ஓடு வேயப்பட்ட கூரையுடன் அமைந்துள்ளது. இங்கு காணப்படுகின்ற சிற்பக் கலையானது முழுக்க முழுக்க கேரளாவில் உள்ளதாகும். கோயிலின் கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. படிகள் கருவறையிலிருந்து நேராக கிழக்கு நோக்கி உள்ளன. கருவறைக்கு முன், ஒரு நமஸ்கார மண்டபம், மற்றும் கருவறையைச் சுற்றி ஒரு பிரதக்ஷிண வழி (பாதை) ஆகியவை உள்ளன. கருவறையைச் சுற்றி கணபதி, ஐயப்பன் சிலைகள் உள்ளன. இந்திரன் முதல் ஈசானா, சப்தமாதர்கள், அஷ்டதிக்பாலகர்களின் பலிக்கல்கள் சுற்றிலும் காணப்படுகின்றன.

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Welcome To Cochin Devaswom Board". பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
  2. "Anniversary of Velur protest to be observed tomorrow". பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
  3. "kururammatrust". பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
  4. "വേലൂര്‍ കുറുമാല്‍ കറുവത്തൂര്‍ ശ്രീരാമസ്വാമി ക്ഷേത്രത്തിലെ പുനരുദ്ധാരണ പ്രവര്‍ത്തനങ്ങള്‍ക്ക് തുടക്കമായി". பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Avanapparambu mana". பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.