கருவூரார் பூசா விதி
சித்தர் பாடல் நூல்
கருவூரார் பூசா விதி (கருவூரார் பூஜா விதி) என்னும் நூல் சித்தர் பாடல் நூல்களில் ஒன்றாகும். [1] இதனைப் பாடியவர் கருவூரில் வாழ்ந்த சித்தர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. கருவூரார் என்று ஊர்ப்பெயரால் இவர் வழங்கப்படுகிறார். இதில் காப்புச் செய்யுள் ஒன்றும், 30 பாடல்களும் உள்ளன. பாடல்கள் எண்சீர் விருத்தம் என்னும் யாப்பு வகையால் அமைந்தவை.
காப்புச் செய்யுளில் வாலைப் பெண்ணைக் குறிப்பிடுகிறார். வாமி, [2] சிவகாமி, ரூபி [3] என்னும் பெயர்களால் சிவனோடு சேர்ந்திருக்கும் உமையை இவர் குறிப்பிடுகிறார்.
பாடல் எடுத்துக்காட்டு
தொகுஆமெனவும் ஊமெனவும் இரண்டும் கூட்டி
- அப்பனே ஓமென்ற மூன்றும் ஒன்றாய்
நாமெனவும் தாமெனவும் ஒன்றே யாகும்
- நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான்
வாமம் வைத்துப் பூசைபண்ண இந்த மார்க்கம்
- வந்தவர்க்குச் சத்திசிறு பிள்ளை வாலை
சோமநதி அமுதம் உண்ண வாவா என்பாள்
- சுகம் உனக்கு பரமசுகம் அருள் செய்வாளே [4]
- ஆம், ஊம் இரண்டும் கூடினால் ஓம் என்று ஆகும்.
- நாம், தாம் இரண்டும் ஒன்று.
- காம உணர்வு உடையவர்களுக்கு இது தெரியாது.
- வாலை (அம்மை) அருள் செய்வாள் - முதலான செய்திகள் இந்தப் பாடலில் கூறப்பட்டுள்ளன.