கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
கருவூர்ப் பூதஞ்சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு பாடல் எண் 50.
பாடல் தரும் செய்தி
தொகுதலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி தன்னால் அன்றில் போலக் குரல் எழுப்ப முடியவில்லையே. ஊர் வெளிப்படையாக அவதூறு பேசுமே என அங்கலாய்த்து வருந்துகிறாள்.
'எல்லி, மனை சேர் பெண்ணை மடிவாய் அன்றில், துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண்' அன்றில் நெய்தல் நிலத்துப் பறவை. பனைமரத்தில் இரவு வேளையில் தங்கும். ஆணோ பெண்ணோ தன் துணை ஒன்று எது எதைப் பிரிந்தாலும் இடைவிடாது ஓயாமல் குரல் எழுப்பிக்கொண்டே யிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 44.