கரு பழனியப்பன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

கரு பழனியப்பன் (Karu Palaniappan மார்ச் 6,1972) தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார்.[2][3]

கரு பழனியப்பன்
பிறப்புமார்ச்சு 6, 1972 (1972-03-06) (அகவை 52)[1]
கானாடுகாத்தான், காரைக்குடி, தமிழ்நாடு
இருப்பிடம்வளசரவாக்கம், சென்னை
பணிநடிகர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
Pia
வலைத்தளம்
http://www.karupalaniappan.com/

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் காரைக்குடியில் பிறந்து வளர்ந்தார். இவரது பெற்றோர் பால சின்ன கருப்பையா மற்றும் நாகம்மையாவர். அவர்களின் 3 குழந்தைகளில் இவர் மூத்தவர். குழந்தைப் பருவத்திலிருந்தே பழனியப்பனை புத்தகங்கள் ஈர்த்தன. இவரது அப்பா சின்ன கருப்பையா, வர்த்தகர் மற்றும் ஒரு தீவிர வாசகர் ஆவார். கண்ணதாசன், ஜெயகாந்தன் மற்றும் அசோகமித்திரன் போன்ற பரவலாக அரியப்பட்ட எழுத்தாளர்களின் படைப்பை வாசிப்பதை ஆர்வமாகக் கொண்டிருந்தார். தனது தந்தையிடமிருந்து வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றார். புத்தகங்களை வாசிப்பதில் இருந்த அவரது விருப்பம் பின்னர் பிற மொழிகளைக் கற்றல், நடிப்பு மற்றும் உரையாடல் ஆகியவற்றில் அவரது திறமைகளை வளர்த்தது.

மதுரை ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் பள்ளியில் கல்வி பயின்ற பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்து, மதுரை தியாகராஜ கல்லூரியில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தமிழ் இலக்கியம் மீதான தீவிரமான நாட்டத்தினால் விகடன் குழும இதழ்களில் மாணவர் பயிற்சியில் சேர்ந்தார்.

1994 ஆம் ஆண்டிலிருந்து திரைப்பட துறையில் பங்காற்றி வருகிறார். பார்த்திபன் உடன் புள்ள குட்டிக்காரன், மற்றும் ஹவுஸ் புல் ஆகிய படங்களில் பணியாற்றினார். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் ஆகியவற்றில் இயக்குனர் எழிலிடம் பணிபுரிந்தார்.

சொந்த வாழ்க்கை

தொகு

பியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இனியா (மகள்) மற்றும் தயா (மகன்) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.[4]

தொழில்

தொகு

கரு பழனியப்பன் இயல்பாகக் கதை சொல்லக்கூடிய நேர்த்திக்காக அறியப்படுகிறார். முதல் தமிழ்த் திரைப்படமான பார்த்திபன் கனவு (2003) படத்தில், ஸ்ரீகாந்த் - சினேகா நடித்துள்ளனர். இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது.[5] 2005 இல் “அசோகமித்திரன்” என்ற பெயரில் ஆரம்பித்த திரைப்படம் நின்றுபோனது.[6] பின்னர் அவர் அதே திரைப்படத்தை 2012 ஆம் ஆண்டில் ஒரு புதிய குழு மற்றும் அருள்நிதி (முன்னணி கதாபாத்திரம்) கொண்டு தொடங்கினார், இருப்பினும் இரண்டு மாத கால படப்பிடிப்புக்குப் பிறகு, படம் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இயக்குநர் மற்றும் நடிகரக 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தத் திட்டத்தை புதுப்பிக்க முயன்றார், ஆனால் மீண்டும் வெற்றி பெறவில்லை.[7][8] இதேபோல் மற்றொரு திட்டம், அமீர் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் பாண்டிய வம்சம், தயாரிப்பு தொடங்கிய பின்னர் நின்றுபோனது.[9]

விஷால் நடித்த இவரது இரண்டாவது படமான சிவப்பதிகாரம் வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது. "பிரிவோம் சந்திப்போம்" குடும்ப பார்வையாளர்களின் முக்கிய கவனத்தைப் பெற்றது. இவரது அடுத்த படமான மந்திரப் புன்னகையில் கதாநாயகனாக அறிமுகமானார், ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த சதுரங்கம் திரைப்படம் 2006 ல் முடிவடைந்தாலும் நீண்ட காலமாக வெளியிடப்படாமலிருந்து கடைசியாக 2011 இல் வெளியிடப்பட்டது. மாதவன் மற்றும் ராஜ் கிரண் ஆகியோர் கரு பழனியப்பனுடன் ஒரு புதிய திரைபப்டத்தில் இணைவதற்காகக் கையெழுத்திட்டனர்.[10]

திரைப்பட வரலாறு

தொகு

இயக்குனராக

தொகு
ஆண்டு படம் இயக்குநர்
நடிகர் குறிப்பு
2003 பார்த்திபன் கனவு ஆம் இல்லை சிறந்த இயக்குநருக்கான மாநில விருது
2006 சிவப்பதிகாரம் ஆம் இல்லை
2008 பிரிவோம் சந்திப்போம் ஆம் இல்லை
2010 மந்திரப் புன்னகை (2010) ஆம் ஆம்
2011 சதுரங்கம் ஆம் இல்லை சிறந்த கதாசிரியருக்கான மாநில விருது
2013 ஜன்னல் ஓரம் ஆம் இல்லை
2016 கல்லன் இல்லை ஆம்
2019 நட்பே துணை இல்லை ஆம்

உதவி இயக்குநர்

தொகு

விருதுகள்

தொகு
 • சிறந்த இயக்குநர் விருது, தமிழ்நாடு மாநில விருது (பார்த்திபன் கனவு – 2003)
 • சிறந்த கதை ஆசிரியர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது (சதுரங்கம் – 2011)

குறிப்புகள்

தொகு
 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2017-07-04.
 2. "Kollywood's Top 25 Directors – Directors – Vetrimaran Balaji Sakthivel Lingusamy Vasanth Karu Pazhaniappan Simbudevan". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2008-11-06.
 3. [1] [தொடர்பிழந்த இணைப்பு]
 4. Biography பரணிடப்பட்டது 2017-07-21 at the வந்தவழி இயந்திரம்.
 5. "Archived copy". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 6. "Archived copy". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 7. http://behindwoods.com/tamil-movie-news-1/apr-12-03/arulnidhi-ashokamitran-21-04-12.html
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-09. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
 9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-01. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
 10. "Madhavan to share screen space with Rajkiran". chennaivision. 3 June 2016 இம் மூலத்தில் இருந்து 3 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160603103304/http://chennaivision.com/madhavan-share-screen-space-rajkiran/. பார்த்த நாள்: 3 June 2016. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரு_பழனியப்பன்&oldid=3896946" இலிருந்து மீள்விக்கப்பட்டது