கர்தார்பூர், பாகிஸ்தான்

கர்தார்பூர் (Kartarpur) (உருது کرتارپور) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின், நரோவல் மாவட்டத்தின், சகர்கர் வருவாய் வட்டத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லையோரத்தில் அமைந்த நகரம் ஆகும். லாகூர் நகரத்திலிருந்து 180 கிமீ தொலைவில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் கர்த்தார்பூர் நகரம் உள்ளது.

கர்தார்பூர்
کرتارپور
நகரம்
குரு நானக் அடக்கம் செய்யப்பட்ட கர்தார்பூர் குருத்துவார்.
குரு நானக் அடக்கம் செய்யப்பட்ட கர்தார்பூர் குருத்துவார்.
கர்தார்பூர் is located in பாக்கித்தான்
கர்தார்பூர்
கர்தார்பூர்
ஆள்கூறுகள்: 32°05′N 75°01′E / 32.08°N 75.01°E / 32.08; 75.01
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
மாவட்டம்நரோவல்
ஏற்றம்
155 m (509 ft)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)

இனக்குழுக்கள்

தொகு

கர்தார்பூர் நகரத்தில் பஞ்சாபி மொழி மற்றும் உருது மொழி பேசும் சீக்கிய, இசுலாமிய குஜ்ஜர், ஜாட் மற்றும் முஸ்லீம் இராசபுத்திர இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

சமயம்

தொகு

கர்தார்பூர் நகரத்தில் இசுலாமிய குஜ்ஜர் இன மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். 1947 இந்திய விடுதலையின் போது, கர்தார் நகரத்தில் வாழ்ந்த சிறுபான்மை மக்களான சீக்கிய மற்றும் இந்து சமயத்தினர் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தனர். மேலும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்த இசுலாமியர்கள் கர்தார்பூர் நகரத்தில் குடியேறினர்.

வரலாறு

தொகு

1522ல் சீக்கிய சமய நிறுவனரான குருநானக் கர்தார்பூர் நகரத்தை நிறுவினார்.[1] மேலும் கர்தார்பூர் நகரத்தில் இறந்த குருநானக் நினைவாக ஒரு தர்பார் சாகிப் குருத்துவார் கட்டப்பட்டது. [2]

கர்தார்பூர் - தேரே பாபா நானக் இணைப்புச் சாலைப் போக்குவரத்து திட்டம்

தொகு

நவம்பர் 2019ல் குருநானக்கின் 550-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, கர்தார்பூரையும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் நகரத்தையும் இணைக்கும் 6.4 கிமீ நீள பன்னாட்டு சாலைப்போக்குவரத்து அமைக்க இந்திய - பாகிஸ்தான் அரசுகள் அடிக்கல் நாட்டியுள்ளது.[3] [4][5]கர்தார்பூர் - தேரா பாபா நானக் இணைப்புச் சாலை 9 நவம்பர் 2019 அன்று பாகிஸ்தான் பகுதியின் கர்த்தார்பூர் சாலையை பிரதமர் இம்ரான் கானும், இந்தியப் பகுதியின் கர்த்தார்பூர் சாலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் திறந்து வைத்தனர்.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Guru Nanak Sahib". Sgpc.net. Archived from the original on 2012-02-18. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Guru Nanak's Legacy: Gurudwara Kartarpur Sahib". Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2018-11-26.
  3. Kartarpur Corridor, All You Need To Know: Top 10 Facts
  4. கர்தார்பூர்-வழித்தடம்-குர்தாஸ்பூர் வழித்தடம்
  5. India, Pakistan commit to Kartarpur corridor
  6. Imran Khan inaugurates Kartarpur Corridor, welcomes first batch of pilgrims
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்தார்பூர்,_பாகிஸ்தான்&oldid=3586495" இலிருந்து மீள்விக்கப்பட்டது