கறையான் தடுப்பு
கறையான் தடுப்பு (Termite barrier) என்பது நிலத்தடி கறையான் ஒரு கட்டமைப்பை அணுகுவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட பொருட்கள் ஆகும். இத்தகைய தடுப்பு பொருட்களில் கறையானைக் கொல்லப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் கறையான்களின் செயல்பாட்டைத் தடுக்கின்றன. நிலத்தடி கறையான்களை திறம்பட விலக்குவதற்கான இயற்த் தடைகளை உருவாக்குவது, கட்டிடத்தின் வாழ்நாளில் கறையான்கள் தாக்குதல் மற்றும் சேதம் ஏற்படுவதற்கான மிகக் குறைந்த சாத்தியக்கூறுகளுடன் கட்டமைப்புகளை வடிவமைத்து உருவாக்க உதவுகிறது. கறையான்களின் சிறிய அளவு (0.02 அங்குலங்கள்) மற்றும் இனப்பெருக்கத் திறன் (ஒரு கறையான் ராணி ஒவ்வொரு 3 விநாடிகளுக்கும் ஒரு முட்டையை உற்பத்தி செய்கிறது, அல்லது ஆண்டுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான முட்டைகளை உற்பத்தி செய்கிறது) மற்றும் பல கட்டுமான பொருட்களைச் சாப்பிடும் திறன், கறையான்களை அனைத்துப் பூச்சிகளிலும் மிகவும் அழிவுகரமானவை கருதவைக்கின்றது.
ஆரம்பக்கால இயற் தடையாக இருந்த கறையான் கவசங்கள், ஒளி சட்டகக் கட்டுமானத்தில் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்படும் உலோகத் தாள் ஆகும். கறையான் கவசங்கள் பெரும்பாலும் மரத்தின் தட்டுகளின் கீழ் பயன்படுத்தப்படுகின்றன. கறையான்கள் கட்டமைப்பிற்கு வெளியே தங்கள் இருப்பிடத்தினை உருவாக்கக் கட்டாயப்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனைப் பயிற்சி பெற்ற பூச்சி மேலாண்மை நிபுணர் நன்கு அறிவார் (கறையான் கவசம் - பார்க்கவும்)
சவ்வுகள்
தொகுகறையான சவ்வு தடைகள் நீட்சித்தன்மைக் கொண்ட அடைப்பான்களைக் கொண்டுள்ளன. இவை அதிக வலிமை கொண்ட ஆதரவுடன் ஒட்டப்படுகின்றன. கட்டிட உறையில் சேர்க்கப்படும்போது, சவ்வு தடைகள் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. கறையான்கள் மற்றும் பூச்சிகளைத் தவிர்த்தலுடன் நீர் புகாமலும், காற்றுத் தடை மற்றும் நீராவித் தடை உள்ளிட்ட கூடுதல் செயல்பாடுகளையும் கொண்டுள்ளன.
கறையான்களுக்கான பயன்பாடுகளில் கற்காரை அடித்தளச் சுவர்கள், ஐ. சி. எப் காப்பிடப்பட்ட கற்காரை வடிவங்கள், கீழ்-பாளம் நீர் புகா அமைப்பு, கீழ்-பாளத் தகடுகள், தரை அடித்தளங்கள் மற்றும் சுவர், ஜன்னல் மற்றும் கதவு ஒளிரும் பொருட்கள் ஆகியவை அடங்கும். கட்டுமான செயல்பாட்டின் போது பெரும்பாலான கறையான் தடுப்புகளை அமைத்தல் வேண்டும்.
அடைப்பான்கள்
தொகுகறையான் அடைப்பான் பொருட்கள் மேலே விவரிக்கப்பட்ட கறையான்களின் சவ்வுகளின் அடிப்படைக் கூறுகளாகும். அடைப்பான்கள் நீழ்த்தன்மையுடன் கூடியன ஆகும். அதாவது இவை கிழிபடாமல் கட்டமைப்புடன் நகர்கின்றன. மேலும் இவை சக்கை அல்லது நீட்சித்தன்மையுடையவையாகக் கிடைக்கின்றன. ஒரு கட்டமைப்பில் உள்ள குழாய் அமைப்பிற்கும் கற்காரைக்கும் இடையே உள்ள இடைவெளியினை இந்த அடைப்பான்கள் மூடி கறையான்கள் பாதிப்பினைத் தடுக்கின்றன. நிலைபெறும் போது அல்லது விரிவான மண் காரணமாகக் கட்டமைப்பு நகரும்போது, அடைப்பான் தடுப்பு பொருள் கறையான்கள் மற்றும் பிற பூச்சிகளால் ஊடுருவ முடியாத ஒரு தடையைப் பராமரிக்கிறது.
துருப்பிடிக்காத எஃகு திரைகள்
தொகுநிலத்தடி கறையான்களைத் திறம்பட விலக்க, 0.02 அங்குலங்களுக்கு (0.5 மிமீ) சிறிய திரை துளைகள் தேவைப்படுகின்றன.[1] கட்டிடத்தின் பல பகுதிகளில் இவை பயன்படுகின்றன.
துகள் தடைகள்
தொகுதுகள்கள் நிறைந்த கறையான் தடைகள் பசிபிக் வடிநிலத்தைச் சுற்றிப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. 1980களில் ஹவாய் பல்கலைக்கழக விஞ்ஞானி மினார் தமாசிரோ என்பவரால் வணிக ரீதியாக இவை உருவாக்கப்பட்டன. இருப்பினும், துகள் தடைகள் சமீபத்தில் தான் அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில் வணிக ரீதியாகக் கிடைத்தன. துகள் தடைகளுக்குப் பின்னால் உள்ள கோட்பாடு எப்லிங் மற்றும் பென்சு (1957), சூ மற்றும் பலர் (1991) சூவும் செப்ர்க்ன் (1992) யாட்சு மற்றும் பலரால் ஆய்வு செய்யப்பட்டது.[2][3][4][5] எரிமலைப் பாறை கறையான் துகள் தடைகள் ஹவாயில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வேறு எந்த இடத்திலும் இவைப் பயன்பாட்டில் இல்லை. ஏனெனில் எரிமலைப் பாறை கற்கள் எரிமலை செயல்பாட்டிலிருந்து வருகிறது. இது உலகின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே நடைபெறுகிறது. ஆத்திரேலியாவில் பயன்படுத்தப்படும் கருங்கல் போன்ற எந்தவொரு கடினமான கனிமமும், தேவையான அளவு மற்றும் வடிவப் பண்புகளைக் கொண்டிருந்தால், கறையான் தடுப்பாகச் செயல்படும்.
2003ஆம் ஆண்டில் டெக்சாசு ஏ & எம் பல்கலைக்கழகத்தில் துகள் தடைகள் குறித்த ஆராய்ச்சி தொடங்கியது. அளவு, கோணத்தன்மை மற்றும் துகள்களுக்கு இடையிலான இடைவெளி உள்ளிட்ட பல்வேறு துகள் பண்புகள் மதிப்பீடு செய்யப்பட்டன.[5] இந்தப் பொருள் ஒரு வீடு அல்லது கட்டமைப்பின் வெளிப்புறச் சுற்றளவைச் சுற்றி 4 அங்குலங்கள் (100 மிமீ) குறுக்கே மற்றும் 5 அங்குலங்கள், (130 மிமீ) கீழே, அடித்தளத்திற்குக் கீழ் நேரடியாக அளவிடும் ஓர் ஆப்பு உருவாக்கத்தில் நிறுவப்படலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Geiger, Chris A.; Cox, Caroline. "Pest Prevention by Design" (PDF). San Francisco Environment. பார்க்கப்பட்ட நாள் 23 February 2017.
- ↑ Ebeling, Walter; Pence, Roy J. (May 1957). "Relation of Particle Size to the Penetration of Subterranean Termites through Barriers of Sand or Cinders". Journal of Economic Entomology 50 (5): 690. doi:10.1093/jee/50.5.690.
- ↑ Su, Nan-Yao; Scheffrahn, Rudolf H.; Ban, Paul M. (1991). "Uniform Size Particle Barrier: A physical exclusion device against subterranean termites (Isoptera: Rhinotermitidae)". Journal of Economic Entomology 84 (3): 912. doi:10.1093/jee/84.3.912.
- ↑ Su, Nan-Yao; Scheffrahn, Rudolf H. (1992). "Penetration of sized-particle barriers by field populations of subterranean termites (Isoptera: Rhinotermitidae)". Journal of Economic Entomology 85 (6): 2275. doi:10.1093/jee/85.6.2275. https://academic.oup.com/jee/article-abstract/84/3/912/2215642/Uniform-Size-Particle-Barrier-A-Physical-Exclusion?redirectedFrom=PDF. பார்த்த நாள்: 24 February 2017.
- ↑ 5.0 5.1 Keefer, T. Chris; Zollinger, Dan G.; Gold, Roger E. (September 2013). "Evaluation of aggregate particles as a physical barrier to prevent subterranean termite incursion into structures". Southwestern Entomologist 38 (3): 447–464. doi:10.3958/059.038.0308. http://www.blueplanetpestcontrol.com/southwestern_entomology.pdf. பார்த்த நாள்: 23 February 2017.
இதரச் சான்றுகள்
தொகு- Scientific American; https://blogs.scientificamerican.com/running-ponies/long-live-the-morbidly-obese-termite-queen-and-her-terrifying-army-of-sweat-licking-babies/
- Pest Control Technology; https://www.pctonline.com/article/pct0215-annual-termite-damage-quest/
- Gold, Roger; (October 2015. "Pest Exclusion Using Physical Barriers - Part of the Sustainable Future for New and Existing Structures" (https://www.youtube.com/watch?v=2c2BEFq9Bmk. ' 'Pest World 2015 - National Pest Management Association' '). Retrieved 25 October 2017.
- International Code Council AC 380 "Acceptance Criteria for Termite Physical Barrier Systems" (http://shop.iccsafe.org/ac380-termite-physical-barriers-approved-oct-2014-editorially-revised-feb-2017-pdf-download.html)
- International Code Council ICC Evaluation Report ESR-3632 TERM Barrier System (http://www.icc-es.org/Reports/pdf_files/load_file.cfm?file_type=pdf&file_name=ESR-3632.pdf)
- International Code Council ICC Evaluation Report ESR-1860 Termimesh Termite Control System (http://www.icc-es.org/Reports/pdf_files/load_file.cfm?file_type=pdf&file_name=ESR-1860.pdf)