முதன்மை பட்டியைத் திறக்கவும்

கலவை, வேலூர் மாவட்டம்

கலவை (ஆங்கிலம்:Kalavai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் ஆற்காடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கலவை
கலவை
இருப்பிடம்: கலவை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°46′N 79°25′E / 12.77°N 79.42°E / 12.77; 79.42ஆள்கூறுகள்: 12°46′N 79°25′E / 12.77°N 79.42°E / 12.77; 79.42
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
வட்டம் ஆற்காடு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,773 (2011)

2,443/km2 (6,327/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

4 சதுர கிலோமீட்டர்கள் (1.5 sq mi)

138 மீட்டர்கள் (453 ft)

இணையதளம் www.townpanchayat.in/kalavai

அமைவிடம்தொகு

கலவை, காஞ்சிபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 43 கிமீ தொலைவிலும், ஆரணியிலிருந்து 22 கிமீ தொலைவிலும், ஆற்காட்டிலிருந்து 20 கிமீ தொலைவிலும், இராணிப்பேட்டையிலிருந்து 23 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

4 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 53 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,343 வீடுகளும், 9,773 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.64% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1040 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

கலவை சங்கர மடம்தொகு

கலவை காஞ்சி சங்கர மடத்தின் கிளையில், 66 & 67-வது ஆச்சாரியர்களின் சமாதிகள் உள்ளது. சந்திரசேகர சரசுவதிகள், கலவையில் துறவற தீட்சை எடுத்துக் கொண்டு, காஞ்சி சங்கர மடத்தின் 68-வது ஆச்சாரியாராகப் பொறுப்பேற்றார். [5]

கலவை பேரூந்து நிலையம் அருகே, சங்கர மடத்தின் சார்பில் முதியோர் இல்லம் மற்றும் உடல் ஊனமுற்றோர் இல்லம் இயங்கி வருகிறது.

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°46′N 79°25′E / 12.77°N 79.42°E / 12.77; 79.42 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 138 மீட்டர் (452 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. கலவை பேரூராட்சியின் இணையதளம்
  4. Kalavai Population Census 2011
  5. ஸ்ரீ சங்கர மடம், கலவை
  6. "Kalavai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கலவை,_வேலூர்_மாவட்டம்&oldid=2742247" இருந்து மீள்விக்கப்பட்டது