கலையுருக்காட்டி

கலையுருக்காட்டி என்பது கண்ணாடிகளை உட்பக்கம் கொண்டதுடன் அதற்கு நடுவில் உள்ள நிறம் கொண்ட அழகிய பொருட்கள் மூலம் விந்தையான உருவங்களைத் தோற்றுவிக்கும் ஒரு கருவியாகும். இதன் ஒரு முடிவிலிருந்து பார்வையாளர் நோக்கும் போது எதிர்ப்பக்கத்தில் இருந்து வரும் ஒளி சமச்சீர் அமைப்புடைய வடிவியல் சார்ந்த உருவங்களை ஒளித்தெறிப்பு மூலம் உருவாக்கும். கலையுருக்காட்டியைப் பார்த்துக்கொண்டே உருளச் செய்வதன் மூலம் முடிவற்ற சமச்சீரான வடிவமைப்புகள் தோன்றும். இது 1817 இல் கண்டுபிடிப்பாளர் டேவிட் பிரூச்டர் ஆல் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

கலையுருக்காட்டியின் உட்புறத்தோற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. Brewster, David (1858). The Kaleidoscope: Its History, Theory, and Construction with its Application to the Fine and Useful Arts (2 ed.). J. Murray.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலையுருக்காட்டி&oldid=3886102" இலிருந்து மீள்விக்கப்பட்டது