கல்பொட அருவி

இலங்கையில் உள்ள அருவி

கல்பொட அருவி இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அருவி ஆகும். கொழும்பு முதல் பதுளை வரை செல்லும் புகையிரத பாதையில் அதிக மழையுடன் குளிர்ச்சியான சூழலை கொண்ட கலபொட சிற்றூரில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

கல்பொட நீர்வீழ்ச்சி
ගල්බොඩ ඇල්ල
Map
அமைவிடம்கல்பொட, இலங்கை
ஆள்கூறு6°47′04″N 80°42′22″E / 6.7844°N 80.7061°E / 6.7844; 80.7061
மொத்த உயரம்30 m (98 அடி)[1]
வீழ்ச்சி எண்ணிக்கை1
மொத்த அகலம்3 m (9.8 அடி)–6 m (20 அடி)

நீர்வீழ்ச்சி 30 m (98 அடி) உயரத்தை கொண்டது மற்றும் நீர்வீழ்ச்சியின் அகலம் பருவத்தை பொறுத்து 3 m (9.8 அடி) – 6 m (20 அடி) ஆக மாறுபடும். இலங்கையில் மழைப் பொழிவு அதிகம் உள்ள ஊரான வட்டவளையில் இருந்து 2 km (1.2 mi) தொலைவில் அமைந்திருப்பதால் கலபொட நீர்வீழ்ச்சி எப்பொதும் செழிப்பாக காணப்படும். இங்கு ஆண்டு மழை 4500 மிமீ இற்கு உயர்வாக காணப்படும். 60% வீதமான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவமழையினால் கிடைக்கிறது. சனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்கள் வறண்ட பருவங்களாகும்.

பெயரின் தோற்றம் தொகு

வீழ்ச்சியின் பெயர் கல்பொடவின் பொருள் 'கல்லை ஒட்டிய வீழ்ச்சி' என்பதாகும். அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள பெரிய கற்பாறையிலிருந்து இது உருவானது.

பயணத் தகவல் தொகு

 
கல்போடா செல்லும் வழியில்

கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் இரண்டு விரைவு புகையிரதங்களும் கலபொட புகையிரத நிலையத்தில் நிற்கின்றன.

கலபொட கிராமம் தொகு

கலபொட, நாவலப்பிட்டி மற்றும் வட்டவளை ஊர்களுக்கு இடையே அமைந்துள்ள கிராமம் ஆகும்.

இயற்கை மற்றும் வனவிலங்குகள் தொகு

நீர்வீழ்ச்சியை சூழவுள்ள வனப்பகுதி வனவிலங்குகளின் தாயகமாகும். இங்கு ஒரு அரிய வகை ஆர்க்கிட் தாவரம் வளர்கின்றது. மேலும் இங்கு 12 வகையான ஊர்வன காணப்படுகின்றன அவற்றில் நான்கு இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன.

படங்கள் தொகு

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Galaboda Water fall". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பொட_அருவி&oldid=3928688" இலிருந்து மீள்விக்கப்பட்டது