கல்வியியல் கல்லூரிகள்

ஆசிரியர் பணிக்கான கல்வியியல் குறித்த பாடங்களைக் கொண்டு நடத்தப்படும் கல்லூரிகள் கல்வியியல் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இத்தகைய கல்வியியல் கல்லூரிகளில் இளம்நிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகள் நடாத்தப்படுகின்றன. இலங்கையில் கல்வியியல் கல்லூரிகள் தற்போதுவரை கற்பித்தலுக்கான டிப்புளோமா கற்கைநெறிகளையே நடாத்திவருகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள கல்வியியல் கல்லூரிகள்

தொகு

தமிழ்நாட்டில் கல்வியியல் கல்விக்காக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அரசுக் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.

அரசுக் கல்லூரிகள்

தொகு

தமிழ்நாட்டில் 5 அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கோயம்புத்தூரில் மட்டும் முதுநிலைப் பட்டப்படிப்பு உள்ளன. மற்ற கல்லூரிகளில் இளநிலைப்பட்டப்படிப்பு மட்டும் உள்ளன.

  1. அரசு பெண்கள் கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர். (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 120 , முதுநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்-30)
  2. அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம், நாமக்கல்.(இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 105)
  3. அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை. (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 100)
  4. அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.(இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 100)
  5. அரசு கல்வியியல் கல்லூரி, வேலூர்.(இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 117)

தன்னாட்சிக் கல்லூரிகள்

தொகு

தமிழ்நாட்டில் 7 தன்னாட்சி நிலைக் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவைகளில் இளநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த 7 கல்லூரிகளிலும் முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு 35 இடங்கள் வீதம் உள்ளன. இளநிலைப்பட்டப்படிப்புக்கான இடங்கள் அடைப்புக்குறிக்குள் அளிக்கப்பட்டுள்ளன.

  1. கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), சைதாப்பேட்டை, சென்னை(இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 230)
  2. வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), திருவல்லிக்கேணி, சென்னை. (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 200)
  3. மேஸ்டன் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), இராயப்பேட்டை, சென்னை.(இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 120)
  4. எ ன்.கே.டி.பெண்கள் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), திருவல்லிக்கேணி, சென்னை. (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 250)
  5. பு னித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), வேப்பேரி, சென்னை. (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 160)
  6. ஸ்டெல்லா மதுதினா கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), அசோக் நகர், சென்னை. (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 200)
  7. ஸ்ரீ இராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), பெரியநாயக்கன்பாளையம், கோயம்புத்தூர். (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 100)

சுயநிதிக் கல்லூரிகள்

தொகு

தமிழ்நாட்டில் கல்வியியல் கல்வி அளிக்கும் 649 சுயநிதிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

நுழைவுத் தகுதி

தொகு
  • இக்கல்லூரிகளில் சேர்வதற்கு இளங்கலை அல்லது இளம் அறிவியல் பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும். வணிகம், பொருளாதாரம், கணக்கியல் போன்ற மேல்நிலை வகுப்பில் மட்டும் இருக்கும் பாடங்களுக்கு முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் வயது வரம்பு இல்லை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வியியல்_கல்லூரிகள்&oldid=3632756" இலிருந்து மீள்விக்கப்பட்டது