கல் சவப்பெட்டி

கல் சவப்பெட்டி (sarcophagus (plural sarcophagi or sarcophaguses) இறந்தவர்களின் சடலத்தை பதப்படுத்திய பின்னர் சுண்ணாம்புக் கல்லாலான சவப்பெட்டியில் வைத்து, சுண்ணாம்புக் கல் பலகை கொண்டு மூடி மண்னின் மேல் அல்லது மண்ணில் புதைப்பது வழக்கம். இதனால் சடலத்தின் நீர் சத்து சுண்ணாம்புக் கல் உறிஞ்சிவிடுகிறது. [1][2] கிரேக்க தாலமி வம்சத்தினர் ஆண்ட பண்டைய எகிப்து நாட்டிலும் மற்றும் உரோமைப் பேரரசிலும் பயன்படுத்தப்பட்ட கல் சவப்பெட்டி மீது கடவுளர் சிற்பங்கள் செதுக்கினர். [3]

பண்டைய எகிப்தியர்களின் கல் சவப்பெட்டி
உரோமப் பேரரசு காலத்திய கிபி 140-150 ஆண்டின் சிற்பங்களுடன் கூடிய கல் சவப்பெட்டி
உரோமைக் கடவுளர்களான அப்போல்லா, மினர்வா மற்றும் மூசஸ் தெய்வகளின் சிற்பங்களுடன் கூடிய கிபி 200 காலத்திய கல் சவப்பெட்டி
கோதிக் கட்டிடக்கலையில் வடிவமைக்க்பட்ட கல் சவப்பெட்டி, ஆண்டு கிபி 1300-1350
சுவீடன் நாட்டு இராணி காத்ரினாவின் கல் சவப்பெட்டி, பின்லாந்து
சிற்பங்களுடன் கூடிய உரோமைப் பேரரசு காலத்திய கல் சவப்பெட்டி, ஆண்டு கிபி 260 - 270

இந்தியாவில்

தொகு

பிரித்தானிய தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் ரியோ[4]140 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் பல்லாவரம் மலையடிவாரத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய கல் சவப்பெட்டியை கண்டறிந்தார். அதே இடத்தில் 2018-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வின் போது தரையிலிருந்து 2 அடி ஆழத்தில் 2,300 முந்ததைய ஒரு கல் சவப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. [5]

சுடுமண்ணால் செய்யப்பட்ட இச்சவப் பெட்டி 5.6 நீளமும்,, 1.5 அடி அகலமும் 1.64 அடி ஆழமும் கொண்டது. கல் சவப்பெட்டியை மூட சிவப்பு மட்பாண்ட மூடி கொண்டிருந்தது. மேலும் இச்சவப்பெட்டிய தாங்குவதற்கு 12 சுடுமண் கால்கள் இருந்தது.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. WordInfo etymology. As a noun the Greek term was further adopted to mean "coffin" and was carried over into LATIN, where it was used in the phrase lapis sarcophagus, "flesh-eating stone", referring to those same properties of limestone.
  2. "Columbia University Department of Archaeology". Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-01-01.
  3. Presbrey - Leland, ‘’Commemoration: The Book of Presbrey - Leland Memorials’’, Presbrey-Leland Incorporated, 1952 p. 79
  4. Alexander Rea
  5. Kabirdoss, Yogesh (28 June 2018). "ASI finds 2,300-year-old sarcophagus in Tamil Nadu". Times of India (Bennett, Coleman & Co. Ltd.). https://timesofindia.indiatimes.com/city/chennai/asi-unearths-2300-year-old-terracotta-coffin-at-pallavaram/articleshow/64754538.cms. 
  6. Archaeological Survey Of India Unearths 2,300-Year-Old Sarcophagus In Pallavaram

ஆதார நூற்பட்டியல்

தொகு
  • Mont Allen, "Sarcophagus", in The Oxford Encyclopedia of Ancient Greece and Rome, edited by Michael Gagarin, vol. 6, p. 214–218 (Oxford: Oxford University Press, 2010).
  • Robert Manuel Cook, Clazomenian Sarcophagi (Mainz: Philipp von Zabern, 1981).
  • R. R. R. Smith, Sculptured for Eternity: Treasures of Hellenistic, Roman, and Byzantine Art from Istanbul Archaeological Museum (Istanbul: Ertuǧ and Kocabıyık, 2001).
  • Paul Zanker and Björn C. Ewald, Living with Myths: The Imagery of Roman Sarcophagi (Oxford: Oxford University Press, 2012).

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sarcophagi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்_சவப்பெட்டி&oldid=3324549" இலிருந்து மீள்விக்கப்பட்டது