களமர் என்போர் வயல்வெளிக் களத்தில் போரடித்து வாழும் உழவர் பெருமக்கள். இவர்கள் களத்திலேயே வீடு கட்டிக்கொண்டு வாழ்வர். [1] வேங்கைப் பூவைத் தலையில் சூடிக்கொள்வர். [2] அரித்த கள்ளை அருந்துவர் [3] நெல் தூற்றுவர். [4] இவர்கள் கரும்பு வெட்டும்போதும், நெல் அறுக்கும்போதும் இசையுடன் பாடுவர். [5] சேற்று நிலத்தில் உழும்போதும், [6] எருதுகளை ஓட்டும்போதும், [7] இசைகூட்டிப் பாடுவர்.

அடிக்குறிப்பு தொகு

  1. மனைக் களமரொடு களம் என்கோ? (புறநானூறு 387)
  2. வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் (நற்றிணை 125)
  3. களமர்க்கு அரித்த விளையல் வெங் கள் புறநானூறு 212
  4. அகநானூறு 366
  5. அறைக் கரும்பின் அரி நெல்லின் இனக் களமர் இசை பெருக, (பொருநராற்றுப்படை 194)
  6. அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே, (மதுரைக்காஞ்சி 260, 393)
  7. எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் மருதம் பண்ணி, (மலைபடுகடாம் 469)
"https://ta.wikipedia.org/w/index.php?title=களமர்&oldid=1435743" இலிருந்து மீள்விக்கப்பட்டது