களுவன்கேணி

இலங்கையின், கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமம்

களுவன்கேணி (kaluwankerny) என்பது இலங்கையின், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்தக் கிராமமானது இரண்டு கிராமசேவகர்கள் பிரிவுகளைக் கொண்டது ஆகும். இது மட்டக்களப்பு மாவட்டத்தில் வடக்கே ஏறாவூர் பிரதேச செயலகப் பகுதியில் கல்குடா தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு முழுமையான தமிழ் கிராமம் ஆகும். இங்கு பிரதானமாக இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்கள் உள்ளன. இந்துக்களே பெரும்பான்மை. உயர்தரத்துடன் கூடிய பாடசாலையாக மட்/ ககு/ களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் காணப்படுகின்றது. மற்றும் ஐந்தாந் தரத்துடன் இரண்டு பாடசாலைகள் உள்ளன.

மீன்பிடிக் கிராமமான இக்கிராமத்தில், இயற்கையான நீரினால் நிறைந்த கேணிகள் அமையப்பெற்றதாலேயே இது களுவன்(கேணி) என்ற காரணப்பெயருடன் காணப்படுகிறது.

இவ்வூரில் பல பகுதிகள் உள்ளன. 1. நெடியமடு 2. கொளணி 3. சுருப்புக்கேணி 4. மாவடிப்பற்று 5. மாதிரிக்கிராமம் 6. நடுப்பகுதி 7. ஏத்துக்கால் 8. சுனாமி வீட்டுத்திட்டம் 9. அக்கரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=களுவன்கேணி&oldid=3635194" இலிருந்து மீள்விக்கப்பட்டது