கள்ளப்பாடு தமிழ்ப் பொதுக் கலவன் பாடசாலை

கள்ளப்பாடு தமிழ்ப் பொதுக் கலவன் பாடசாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] 2005ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 266 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றதுடன் ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரை வரை வகுப்புக்கள் நடைபெற்றன.

இப்பாடசாலை 2004 ஆழிப்பேரலையின் போது முற்றாக அழிந்தது.[2] இதன் போது இப்பாடசாலையில் பயின்ற 63 மாணவர்கள் உயிரிழந்தனர்.[3][4] இதன் பின்னர் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக் கட்ட ஈழப்போரின் போது இப்பாடசாலை மீண்டும் பெரும் அழிவைச் சந்தித்தது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் - பாடசாலை". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. க. குணராசா. "சுனாமி கடற்கோள் 26/12 (2004)". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2016.
  3. "ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவலைகள்- 63 சிறார்களின் உறவுகள் கண்ணீர் அஞ்சலி". TTN NEWS. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2016.
  4. "கள்ளப்பாடு அ.த.க பாடசாலையிலும் ஆழிப்பேரலை நினைவுநாள் அனுஷ்டிப்பு". Malarum.com. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "மர நிழல்களின் கீழ் தொடரும் கல்வி". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2016.