கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி

கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி (அக்டோபர் 2, 1948 - சனவரி 14, 2021) என்பவர் தமிழக எழுத்தாளர் ஆவார். தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கள்ளிப்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர், இங்குள்ள நாயகம் நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான “நல்லாசிரியர் விருது” எனும் “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” பெற்றவர். ஐம்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கும் இவர் எழுதிய “மருது சகோதரர்கள்” எனும் நூல் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மாவட்டம் வாரியாக வழங்கும் ‘தமிழ்ச்செம்மல்’ விருதினை 2018 ஆம் ஆண்டில் பெற்றிருக்கிறார்.[1]

கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி
பிறப்புசு. குப்புசாமி
அக்டோபர் 2, 1948
கள்ளிப்பட்டி,
பெரியகுளம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
இறப்புசனவரி 14, 2021(2021-01-14) (அகவை 72)
பெரியகுளம்
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
இருப்பிடம்கள்ளிப்பட்டி, பெரியகுளம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்கள்ளிப்பட்டி சு.குப்புசாமி,
கள்ளிப்பட்டி சேவகன்
கல்விஇடைநிலை ஆசிரியர் பயிற்சி
பணிஓய்வு பெற்ற ஆசிரியர்
அறியப்படுவதுஆசிரியர், எழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்சுப்பையா (தந்தை),
அன்னத்தாயம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
ஜெயலட்சுமி
பிள்ளைகள்உமா மகேசுவரி (மகள்),
தனலட்சுமி (மகள்),
தனசேகரன்(மகன்)
உறவினர்கள்சகோதரி - 1
விருதுகள்தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது, தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற கள்ளிப்பட்டி. சு. குப்புசாமியை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பாராட்டிப் பரிசு அளித்தல்

மேற்கோள்கள் தொகு