கவிதை நாடகம்

கவிதை நாடகம் என்பது நாடக வகைகளில் ஒன்று. ஒரு நாடகத்தில் கதை மாந்தரின் உரையாடல்கள் அனைத்தும் கவிதை வடிவிலேயே அமைந்திருந்தால் அது கவிதை நாடகம் எனப்படும். மேலை நாட்டுக் கவிதை நாடகங்களைப் பின்பற்றி தமிழிலும் கவிதை நாடகங்கள் எழுதப்பட்டன; இவை யாப்பு நெறிகளுக்கு உட்பட்டவை.

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "மனோன்மணியம்" தமிழில் எழுதப்பட்ட முதல் கவிதை நாடகம். மறைந்த மாநகர், புகழேந்தி, புலவர் உள்ளம், அன்னி மிஞிலி எனப் பல கவிதை நாடகங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் கவிதை நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. எ.கா :கனகை, புகழேந்தி, அனிச்ச அடி, ஆபுத்திரன், வேங்கையின் வேந்தன், நெடுமான் அஞ்சி, இரவிவர்மன், இராஜாதேசிங்கு, சாகுந்தலை, தமயந்தி, கூடல் சங்கமம் (இரா. பெருமாள் ராசு).

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதை_நாடகம்&oldid=2956439" இலிருந்து மீள்விக்கப்பட்டது