கவுசிகா நதி

கவுசிகா நதி (Kowsika river)[1] கோவை மாவட்டத்தில் குருடி மலை, பொன்னூத்து மலை களில் ஆரம்பிக்கிறது. கோவை குருடம்பாளையம், நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதிகளை சார்ந்த தாள மடல் பள்ளம், தன்னாசி பள்ளம், செம்பள்ளம் போன்ற ஓடைகளை தன்னகத்தே இணைத்து, என்.ஜி.ஜி.ஓ.காலனி(அசோகபுரம்) இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம் வழியாக வாகராயம்பாளையம், தெக்கலூர், புதுப்பாளையம் சென்று திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் நொய்யலாற்றில் கலக்கிறது[2]. இந்த ஆற்றின் நீளம் 52 கிலோமீட்டர். இந்த ஆறு பவானி ஆற்றுக்கும் நொய்யல் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் பாய்கிறது.

கவுசிகா நதி

கவுசிகா நதிக்கரையில் கிடைத்த தொல்லியல் மட்பாண்டங்கள் அண்ணாமலை பல்கலைகழகத்தின் பேராசிரியர் சிவராமகிருஷ்ணனால் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்து உள்ளார்.[சான்று தேவை]

கோயம்புத்தூருக்கு தெற்கே நொய்யல் ஆறும், வடக்கில் பவானி ஆறும் ஓடுகின்றன. இடையில் ஓடும் கவுசிகா நதி குறைவான மழைப் பொழிவாலும், மலைகளில் உண்டாக்கப்பட்ட தடுப்பணைகளாலும் கவுசிகா நீர் வரத்து முற்றிலும் நின்று விட்டது. தமிழகத்தின் மழை குறைந்த இந்த வழித்தட பகுதிகளின் நிலத்தடி மேம்பாடு கவுசிகா நதி சார்ந்தே உள்ளன.இன்று கௌசிகா நதி ஒரு சிறிய நதியாக உள்ளது.

இவற்றையும் பார்க்கதொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. "Nature profile". 2012-03-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. கௌசிகா நதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தினமணி, நாள்:நவம்பர் 29, 2014

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுசிகா_நதி&oldid=3365782" இருந்து மீள்விக்கப்பட்டது