கவுந்தி அடிகள்
சிலப்பதிகாரக் கதை மாந்தர்களுள் ஒருவர்
கவுந்தி அடிகள் சிலப்பதிகாரக் கதை மாந்தர்களுள் ஒருவர். இவர் ஒரு சமணபெண் துறவி ஆவார்.[1] கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு கூட்டி வருவது கவுந்தி அடிகளேயாகும். வரும் வழியில் சிலர் கண்ணகியையும் கோவலனையும் பார்த்து வினவ கவுந்தி அடிகளோ "இவர்கள் எம் மக்கள்" என்கிறார். கேட்டவர்களோ "உம் மக்கள் ஒருவரையொருவர் மணமுடிப்பரோ" என்று கேலி பேச அவர்களை நரிகளாகுமாறு சாவிக்கிறார். இது இவரது தவவலிமைக்கு தக்க சான்றாகும். பின்னர் மாதரி என்னும் விருந்தோம்பலில் சிறந்த பெண் வீட்டில் கண்ணகியை தங்கவும் வைக்கிறார்.
பரவலர் பண்பாட்டில்
தொகுசிலப்பதிகாரத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்ட திரைப்படமான பூம்புகாரில் கவுந்தி அடிகளாக கே. பி. சுந்தராம்பாள் நடித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ எஸ். சௌந்தரபாண்டியன் (1998). தமிழில் காப்பியங்கள். ஸ்டார் பிரசுரம், சென்னை. p. 170.