கஸ்தமோனு மாகாணம்

துருக்கியின் மாகாணம்

கஸ்தமோனு மாகாணம் (Kastamonu Province துருக்கியம்: Kastamonu ili ) என்பது துருக்கியின் மாகாணங்களில் ஒன்றாகும், இது நாட்டின் வடக்கே கருங்கடல் பகுதியில் உள்ளது. இது கிழக்கில் சினோப், மேற்கில் பார்ட்டன், கராபக், தெற்கே சங்காரே, தென்கிழக்கில் கோரம் மற்றும் வடக்கே கருங்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

கஸ்தமோனு மாகாணம்
Kastamonu ili
Location of Kastamonu Province in Turkey
Location of Kastamonu Province in Turkey
நாடுதுருக்கி
பிராந்தியம்மேற்கு கருங்கடல்
துணை பிராந்தியம்Kastamonu
அரசு
 • Electoral districtKastamonu
பரப்பளவு
 • மொத்தம்13,108 km2 (5,061 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • மொத்தம்3,83,373
 • அடர்த்தி29/km2 (76/sq mi)
இடக் குறியீடு0366
வாகனப் பதிவு37

புள்ளியியல்

தொகு

இந்த மாகாணத்தின் பரப்பளவு 13,108 கிமீ² ஆகும். இதன் மக்கள் தொகை மற்றும் 322,759 (2006 கணக்கு). 2010 இல் இதன் மக்கள் தொகை 361,222 என இருந்தது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு கிமீ²க்கு 24.62 மக்களாவர். மாகாண தலைநகரின் மக்கள் தொகை 64,606 ஆகும்.

மாவட்டங்கள்

தொகு

கஸ்தமோனு மாகாணம் 20 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கூறுகள்

தொகு
 
துருக்கியின் கஸ்தமோனுவின் பெனார்பாசுக்கு அருகிலுள்ள கோரே தேசிய பூங்காவில் இலாசு அருவி

இந்த மாகாணமானது பெரும்பாலும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இது லேசான கருங்கடல் காலநிலை கொண்டுள்ளது. மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் ஏராளமான நீரோடைகள் கொண்டு நுட்ப கால நிலை நிலவும் இல்காஸ் தேசிய பூங்காவானது, மாகாண தலைநகரமான கஸ்தமோனுவிலிருந்து 63 கி.மீ தெற்கே உள்ளது. பூங்காவிற்கு அருகில் தங்குமிட வசதிகளுடன் கூடிய பனி நடைக் கட்டை மையமும் உள்ளது.

இல்காஸ் மலை (மிக உயர்ந்த சிகரம் 2587 மீ) மாகாணத்தின் தெற்கே பரவி உள்ளது, அங்கு இல்காஸ் நீரோட்டத்தில் சறுக்குப்படகு பயணம் போன்ற நீர்விளையாட்டுகள் சாத்தியமாகும். சைடில் உள்ள இல்காரினி குகை, கோரிலுள்ள அலின்கா குகை மற்றும் தாதேயின் சர்வதேச குதிரையேற்ற சுற்றுலா மையம் ஆகியவை குறிப்பிடத்தக்க இடங்களாகும்.

12 ஆம் நூற்றாண்டின் பைசாந்தினிய கோட்டை, 13 ஆம் நூற்றாண்டு அடாபே பள்ளிவாசல் மற்றும் இப்னி நெக்கர் பள்ளிவாசல் ஆகியவை மாகாணத்தில் அமைந்துள்ளன. கசாபா கிராமத்தில் அமைந்துள்ள மஹ்முத் பே பள்ளிவாசல் அதன் நேர்த்தியான மர வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது.

சிடேக்கு 13 கி.மீ தொலைவில் உள்ள கிடெரோஸ் பே, ஓய்வகம் மற்றும் மீன் உணவகங்களுடன் கூடிய விடுமுறை விடுதி ஆகும்.

 
கிடெரோஸ் விரிகுடா, சைட்
 
கிடெரோஸ் விரிகுடா, சைட்

ரோமானிய நகர-மாநிலமான பாம்பியோபோலிஸின் இடிபாடுகள் தாக்பிரோவுக்கு அருகில் காணப்படுகின்றன.

கஸ்தமோனுவில் பல மாளிகைகள் உள்ளன, அவை பாரம்பரியமாக இந்த பிராந்தியத்தின் தனித்துவமான கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன. இந்த வரலாற்று கட்டுமானங்களைப் பாதுகாக்க உள்ளூர் அரசாங்கம் 2000 ஆம் ஆண்டு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மாளிகைகள் பல பழுதுபார்க்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம்

தொகு

2000 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாகாணத்தில் உள்ள தொழிலாளரின் ஆற்றலில் 77.5% வேளாண்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விகிதமானது நாட்டின் சராசரியை விட கூடுமானதாக உள்ளது. இரண்டாவது பெரிய துறையாக பொதுத் துறை மற்றும் தனியார் சேவைகள் (8.9%) உள்ளன.

ஏறக்குறைய விளைநிலங்கள் அனைத்தும் நிரந்தர பயிர்களைக் (தோப்பு) கொண்டுள்ளன. இந்த மாகாணத்தின் விவசாய பொருட்களானது துருக்கியில் மொத்தத்த வேளாண் பொருட்களில் 0.01% மட்டுமே ஆகும். விவசாய விளைபொருட்களின் பெரும்பகுதி தானியங்களாகவே உள்ளன. மாகாணமானது பரவலாக வனப்பகுதிகளைக் (மொத்தம் 57% பரப்பளவு) கொண்டுள்ளது. இதனால் இங்கு வனவியல் ஒரு முக்கியமான தொழிலாக உள்ளது. தொழில்களானது பெரும்பாலும் வனவியல், வேளாண்மை மற்றும் சுரங்கப் பொருட்களின் உற்பத்தியைக் கொண்டுள்ளது.

நிலத்தடி வளங்களில் தாமிரம், பாதரசம், இரும்புத் தாது, குரோமியம், மாங்கனீசு, கல்நார், பாக்சைட்டு, கிராபைட்டு, பாஸ்பேட், வெண்களிமண், களிமண், சுண்ணக்கல், குவார்ட்சு, பளிங்கு, மெக்னசைட்டு, தீ களிமண், நிலக்கரி மற்றும் நிக்கல் ஆகியவை அடங்கும். சில இயற்கையான வெந்நீர் மற்றும் கனிம நீரூற்றுகளும் உள்ளன, அவற்றில் சில பொருளாதார முதலீடுகளுக்கு ஏற்றவையாகும்.

கஸ்தமோனு மாகாணமானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.4% பங்கைக் கொண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு பின்வருமாறு (1998 est. ):

  • விவசாயம்: 32.8%
  • தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து: 20%
  • சேவைத் துறை: 16.8%
  • தொழில்: 9.5%

மாகாணத்தில் போக்குவரத்தானது சலை மற்றும் செப்பனிடப்படாத நெடுஞ்சாலைகள் வழியாக மட்டுமே சாத்தியமாகும்; Çankırı, Kastamonu மற்றும் İnebolu ஐ இணைக்கும் ஒரு இரயில் பாதை கட்டுமானத்தில் உள்ளது. [எப்போது?]   இந்த மாகாணத்தில் கருங்கடலை ஒட்டி 135 கி.மீ நீளமுள்ள கடற்கரை உள்ளது என்றாலும், அபோலு மட்டுமே ஒரு சிறிய துறைமுகத்தைக் கொண்டுள்ளது. மேலும் கடலின் போக்குவரத்து கிட்டத்தட்ட இல்லை. மாகாணத்தில் சுமார் 112,000 தொலைபேசி தரைவழி இணைப்புகளும், சுமார் 200,000 செல்பேசி சந்தாதாரர்கள் மற்றும் 15,000 இணைய பயனர்கள் உள்ளனர்.[சான்று தேவை]

குறிப்புகள்

தொகு
  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தமோனு_மாகாணம்&oldid=2868305" இலிருந்து மீள்விக்கப்பட்டது