கஸ்தூரி ராஜாமணி

இந்திய பாரம் தூக்கும் வீரராங்கனை

கஸ்தூரி ராஜாமணி (Kasthuri Rajamani) (பிறப்பு: ஆகஸ்ட் 23,1984)[1] தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பாரம் தூக்கும் வீரராங்கனை ஆவார்.[2] பாரிசில் நடைபெற்ற 2024 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்களுக்கன 67 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த இவர் தகுதி பெற்றார்.[3] 106 கிலோ என்ற தனிப்பட்ட சாதனையுடன், பாரிசில் 8 வது இடத்தைப் பிடித்தார்.[4]

இளமை வாழ்க்கை

தொகு

கஸ்தூரி தனது குழந்தை பருவத்தில் இரு கால்களிலும் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது சிறுவயதிலேயே தாயை இழந்த இவர் பாட்டியால் வளர்க்கப்பட்டார். துப்பாக்கி சுடும் வீராங்கனையான ஒரு தோழி மூலம், 2018 டிசம்பரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பளுதூக்கும் அகாதமியில் பயிற்சிக்காக சென்றார். பின்னர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூத்த இணை விளையாட்டுப் பயிற்சியாளரான ஜி. விஜய சாரதியிடம் பயிற்சி பெற்றார்.[5] 2023 ஆம் ஆண்டில், இந்திய விளையாட்டு ஆணையத்தால் இவருக்கு கூடுதல் பயிற்சி வழங்கப்பட்டது.

தொழில் வாழ்க்கை

தொகு

கஸ்தூரி, சீனா காங்சூ நகரில் நடந்த 2022 ஆசிய இணை விளையாட்டுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[6] அங்கு 67 கிலோ எடைப் பிரிவில் 5 வது இடத்தைப் பிடித்தார்.[2] முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றார்.<[4][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kasthuri Rajamani". Paris 2024 Paralympics. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.
  2. 2.0 2.1 {{Cite web|url=https://www.paralympic.org/en/paris-2024-paralympics/athlete/kasthuri-rajamani_2500986%7Ctitle=Kasthuri Rajamani|website=[[Paris 2024 Paralympics|access-date=2024-09-06}}
  3. "At 39, Kasthuri set for debut at Paralympics". The Times of India. 2024-07-07. https://timesofindia.indiatimes.com/city/chennai/kasthuri-rajamani-qualifies-for-paralympics-debut-at-39/articleshow/111545717.cms. 
  4. 4.0 4.1 "Powerlifter Kasthuri Rajamani Finishes 8th At Paralympic Games | Olympics News". NDTVSports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-08.
  5. Thomas, Liffy (2024-08-31). "Paralympic Games: More power to Kasthuri" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/paralympic-games-more-power-to-kasthuri/article68590988.ece. 
  6. "Khelo India Para Games: TN's Kasthuri Bags Powerlifting Gold; Manish Hits Bulls Eye In Shooting - Eastern Mirror". easternmirrornagaland.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-12-14. பார்க்கப்பட்ட நாள் 2024-08-13.
  7. "Powerlifter Kasthuri Rajamani finishes 8th at Paris Paralympics". The Times of India. 2024-09-06. https://timesofindia.indiatimes.com/sports/paris-paralympics/powerlifter-kasthuri-rajamani-finishes-8th-at-paris-paralympics/articleshow/113135009.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தூரி_ராஜாமணி&oldid=4111888" இலிருந்து மீள்விக்கப்பட்டது