காஃப் தீவு (Gough Island), தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்த கரடுமுரடான ஒரு எரிமலைத் தீவு ஆகும். இது தெற்கு ஜார்ஜியா தீவிற்கு தென்கிழக்கில் 3,200 கிலோ மீட்டர் (2,000 மைல்) மற்றும் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு தென்மேற்கே 3,200 கிலோ மீட்டர் (2,000 மைல்) தொலைவில் உள்ளது. இது மனிதர்கள் வாழாத தீவுகளில் ஒன்றாகும். இத்தீவு ஐக்கிய இராச்சியத்திற்கு உரிமையானது. இத்தீவில் ஐக்கிய இராச்சியத்தின் மேற்பார்வையில் இயங்கும் தென்னாப்பிரிக்க தேசிய அண்டார்டிக் திட்டம் 1956ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. அரிய பறவைகள் வாழிடமான இத்தீவை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய களமாக அறிவித்துள்ளது.[2] .[3][4][5]20 நவம்பர் 2008 அன்று யுனெஸ்கொ நிறுவனம் இத்தீவை ராம்சர் பறவைகள் காப்பகமாக அறிவித்துள்ளது. இத்தீவை முதலில் கண்ட பிரித்தானிய கடற்படை கேப்டன் சார்லஸ் கோஃப்பின் நினைவாக இத்தீவிற்கு காஃப் தீவு எனப்பெயரிடப்பட்டது.

காஃப் தீவு
பனி படர்ந்த காஃப் தீவின் காட்சி
Lua error in Module:Location_map at line 522: Unable to find the specified location map definition: "Module:Location map/data/South Atlantic" does not exist.
புவியியல்
அமைவிடம்தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள்40°19′12″S 09°56′24″W / 40.32000°S 9.94000°W / -40.32000; -9.94000
தீவுக்கூட்டம்துரிஸ்தான் சுங்கா
பரப்பளவு91 km2 (35 sq mi)
நீளம்13 km (8.1 mi)
அகலம்7 km (4.3 mi)
உயர்ந்த ஏற்றம்910 m (2,990 ft)
உயர்ந்த புள்ளிஎடின்பரோ கொடுமுடி
நிர்வாகம்
ஐக்கிய இராச்சியம்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
கட்டளை விதிஇயற்கை: (vii), (x)
உசாத்துணை740
பதிவு1995 (19-ஆம் அமர்வு)
Invalid designation
தெரியப்பட்டது20 நவம்பர் 2008
உசாவு எண்1868[1]

புவியியல் தொகு

 
காஃப் தீவின் வரைபடம்
படிமம்:Bulletin of the British Museum (Natural History) Botany (1981) (20450043601).jpg
115 m (377 அடி) உயரம் கொண்ட காஃப் தீவின் கிழக்கு கடற்கரையின் கொடுமுடி

உலகின் தொலைதூர தீவுகளில் ஒன்றான கோஃப் தீவு தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது. தீவின் மையப் பகுதி ஒரு பீடபூமியாக இருந்தாலும், மேற்குப் பகுதியில் 350 மீட்டருக்கு மேல் உயரமான மலைச்சிகரங்கள் மற்றும் பாறைகள் கொண்ட மலைப்பகுதி உள்ளது. கோஃப் தீவு 13 கிலோ மீட்டர் (8.1 மைல்) நீளமும், 7 கிலோ மீட்டர் (4.3 மைல்) அகலமும் கொண்ட செவ்வக வடிவில் உள்ளது. இது 91 சதுர கிலோ மீட்டர் (35 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் (3,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[6].[7] Geological formations on the island are of volcanic origin.[7]இத்தீவு எரிமலைகள் கொண்டவை.[23] இதன் ஆண்டின் சராசரி வெப்பநிலை 12 °C (54 °F) மற்றும் சராசரி மழைப்பொழிவு 3,000 மில்லி மீட்டர் (120 அங்குலம்) ஆகும். குளிர்காலத்தில் மலைப்பகுதிகளில் பனி விழுகிறது.

காலநிலை தொகு

கோஃப் தீவு ஒரு கடல்சார் காலநிலையைக் கொண்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் வெகு தொலைவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலை காரணமாக, கோஃப் தீவின் அதிக வெப்பநிலை ஆண்டு முழுவதும் பகல் வெப்பம் 11 °C (52 °F) முதல் 17 °C (63 °F) வரை இருக்கும். இதனால் கோடை வெப்பம் குறைவாக இருக்கும். அட்லாண்டிக் வடக்குப் பகுதியை விட தெற்கு அரைக்கோளத்தில் மிகவும் குளிராக இருப்பினும், உறைபனிகள் மிகவும் அரிதானவை. ஆண்டு முழுவதும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். சூரிய ஒளி நேரம் குறைவாக இருக்கும். உள்நாட்டு மலைச்சிகரங்களில் பனி விழுகிறது.[8]

தட்பவெப்ப நிலைத் தகவல், காஃப் தீவு (1961–1990, 1956–1990 உச்சம்)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 26.4
(79.5)
25.7
(78.3)
25.9
(78.6)
22.6
(72.7)
20.5
(68.9)
20.6
(69.1)
19.3
(66.7)
21.7
(71.1)
19.3
(66.7)
21.4
(70.5)
23.9
(75)
25.1
(77.2)
26.4
(79.5)
உயர் சராசரி °C (°F) 17.2
(63)
17.4
(63.3)
16.9
(62.4)
15.4
(59.7)
13.7
(56.7)
12.4
(54.3)
11.5
(52.7)
11.2
(52.2)
11.5
(52.7)
12.9
(55.2)
14.9
(58.8)
16.2
(61.2)
14.3
(57.7)
தினசரி சராசரி °C (°F) 13.9
(57)
14.4
(57.9)
13.9
(57)
12.8
(55)
11.3
(52.3)
10.0
(50)
9.1
(48.4)
8.9
(48)
8.9
(48)
10.1
(50.2)
11.9
(53.4)
13.2
(55.8)
11.5
(52.7)
தாழ் சராசரி °C (°F) 11.1
(52)
11.6
(52.9)
11.3
(52.3)
10.4
(50.7)
8.9
(48)
7.6
(45.7)
6.6
(43.9)
6.5
(43.7)
6.6
(43.9)
7.8
(46)
9.4
(48.9)
10.3
(50.5)
9.0
(48.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) 5.3
(41.5)
5.1
(41.2)
4.8
(40.6)
3.7
(38.7)
1.4
(34.5)
0.1
(32.2)
-0.9
(30.4)
-2.7
(27.1)
0.2
(32.4)
0.5
(32.9)
2.4
(36.3)
4.1
(39.4)
−2.7
(27.1)
பொழிவு mm (inches) 210
(8.27)
183
(7.2)
254
(10)
276
(10.87)
286
(11.26)
310
(12.2)
273
(10.75)
304
(11.97)
270
(10.63)
249
(9.8)
213
(8.39)
241
(9.49)
3,069
(120.83)
ஈரப்பதம் 81 82 82 82 82 83 83 83 81 81 81 81 82
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 16 13 18 19 21 22 23 21 20 18 16 18 225
சூரியஒளி நேரம் 183.8 148.8 123.3 95.6 83.7 60.4 71.7 87.5 101.6 128.5 161.4 182.9 1,429.2
Source #1: NOAA,[9] Deutscher Wetterdienst (extremes)[10]
Source #2: climate-charts.com[11]
 
காஃப் தீவின் மரங்கள்

பறவைகள் தொகு

 
ஆண் காஃப் பண்டிங் பறவை

20 நவம்பர் 2008 அன்று ராம்சர் சாசனம் கோஃப் தீவை பறவைகள் காப்பகமாக அறிவித்துள்ளது. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[12] இத்தீவு கடல் பறவைகள் கூடுகட்டு, குஞ்சு பொரிப்பதற்கும், சிறந்த தங்குமிடங்களில் ஒன்றாக உள்ளது.இந்த தீவில் ஏறக்குறைய பறக்க முடியாத கோஃப் மூர்ஹென் பறவைகள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கஃப் பன்டிங் பறவைகள் உள்ளது. பன்னாட்டு கடற்பறவைகள் காப்பகம் இத்தீவில் செயல்படுகிறது. [13]இத்தீவில் யாரும் நிரந்தரமாக தங்குவது இல்லை. ஆனால் இந்த தீவில் 80 இலட்சம் பறவைகள் வசிப்பதாக கூறப்படுகிறது. இத்தீவில் பறவைக்குஞ்சுகளை அச்சுறுத்தும் வகையில் எலித்தொல்லை உள்ளது.

வானிலை நிலையம் தொகு

1956ஆம் ஆண்டு முதல் கோஃப் தீவில் வானிலை நிலையம் இயங்கி வருகிறது. இது தென்னாப்பிரிக்க வானிலை சேவையின் வலைப்பின்னலின் ஒரு பகுதியாக இயக்கப்படுகிறது. தென்மேற்கில் இருந்து தென்னாப்பிரிக்காவை குளிர்ந்த முனைகள் நெருங்குவதால், குளிர்கால வானிலை முன்னறிவிப்பதில் கோஃப் நிலையம் மிகவும் முக்கியமானது.

மனித இருப்பு தொகு

ஒவ்வொரு ஆண்டும், வானிலை நிலையத்தை பராமரிப்பதற்கும், அறிவியல் ஆராய்ச்சி செய்வதற்கும் கேப் டவுனிலிருந்து ஒரு குழு கப்பலில் இத்தீவிற்கு செல்கிறது.[14][15] 7 பேர் கொண்ட குழுவில் பின்வரும் நிபுணர்கள் இருப்பர்:

  • மூத்த வானிலை ஆய்வாளர்
  • இரண்டு இளைய வானிலை ஆய்வாளர்கள்
  • ஒரு வானொலி தொழில்நுட்ப வல்லுநர்
  • ஒரு மருத்துவர்
  • ஒரு டீசல் தொழில் நுட்பாளர்
  • பறவைகள் தரவு சேகரிப்பாளர்

ஆண்டு முழுவதும் தேவையான பதப்படுத்தப்பட்ட உணவு இக்குழுவிற்கு உலங்கு வானூர்திகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.[16]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Gough Island". https://rsis.ramsar.org/ris/1868. 
  2. Gough and Inaccessible Islands
  3. Swales, M. K. (1965). The sea‐birds of Gough Island. Ibis, 107(2), 215-229.
  4. BirdLife International, 2017. "Important Bird Areas factsheet: Gough Island." [1]
  5. Caravaggi, A., Cuthbert, R. J., Ryan, P. G., Cooper, J., & Bond, A. L. (2019). The impacts of introduced House Mice on the breeding success of nesting seabirds on Gough Island. Ibis, 161(3), 648-661.
  6. "Gough Island". Sanap.ac.za. http://www.sanap.ac.za/sanap_gough/sanap_gough.html. 
  7. 7.0 7.1 "Gough Island Scientific Survey, 1955-56". Scott Polar Research Institute University of Cambridge. http://www.spri.cam.ac.uk/resources/expeditions/goughisland/. 
  8. Riffenburgh, Beau (20 May 2018). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] &pg=PA471 காஃப் தீவு Encyclopedia of the Antarctic]. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-97024-2. கூகுள் புத்தகங்களில் &pg=PA471 காஃப் தீவு. 
  9. "Gough Island Climate Normals 1961−1990". National Oceanic and Atmospheric Administration. ftp://ftp.atdd.noaa.gov/pub/GCOS/WMO-Normals/TABLES/REG__I/UA/68906.TXT. [தொடர்பிழந்த இணைப்பு]
  10. "Klimatafel von Gough Island / Südatlantik / Großbritannien" (in de). Baseline climate means (1961–1990) from stations all over the world (Deutscher Wetterdienst). http://www.dwd.de/DWD/klima/beratung/ak/ak_689060_kt.pdf. 
  11. "Climate Statistics for Gough Island, South Africa". 20 February 1998. http://www.climate-charts.com/Locations/u/UA68906.php. 
  12. "Gough and Inaccessible Islands". UNESCO Organization. https://whc.unesco.org/en/list/740. 
  13. "Gough Island". Important Bird Areas factsheet (BirdLife International). 2012. http://www.birdlife.org. 
  14. "South Africa National Antarctic Programme – Gough Island Teams" பரணிடப்பட்டது 12 செப்டம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம், Retrieved 12 February 2014
  15. Chris Bell, "Chris Bell's Blog from Gough 58" பரணிடப்பட்டது 22 பெப்ரவரி 2014 at the வந்தவழி இயந்திரம், Retrieved 12 February 2014
  16. தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டனுக்கு சொந்தமான காஃப் தீவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஃப்_தீவு&oldid=3705433" இருந்து மீள்விக்கப்பட்டது