காகம் பதிப்பகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காகம் பதிப்பகம் இலங்கையின் வாழைச்சேனையைத் தளமாகக் கொண்டு இயங்கும் புத்தகப் பதிப்பு நிறுவனமாகும். எழுத்தாளர் ஏ. பி. எம். இத்ரீஸ், தனது சகோதரர்களின் உதவியுடன் 1998 ஆம் ஆண்டு இதனைத் தொடங்கினார். ஏபிஎம் மீடியா எனும் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இப்பதிப்பகம் செயற்பட்டு வருகிறது.
தோற்றமும் வளர்ச்சியும்
தொகுதொடக்க நிலையில் யாத்ரா என்ற பெயரைக் கொண்டு இயங்கியது. இதன் மூலம் கவிஞர் ஏ. ஜி. எம். ஸதக்காவின் போர்க்காலப் பாடல் அடக்கம் மூன்று நூல்கள் வெளிவந்தன. 1999 ஆம் ஆண்டு முதல் உயிர்ப்பைத் தேடும் வேர்கள் என பெயரை மாற்றிக் கொண்டு எழுத்தாளர் வை. அஹ்மத்தின் முக்காடு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. 2009 ஆம் ஆண்டுவரை சுமார் 20 நூல்கள் இப்பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தன. மாறிவரும் இலங்கைப் பதிப்புச் சூழலுக்கு ஏற்ப புதிய திட்டங்களுடன் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் காகம் பதிப்பகம் எனும் பெயரில் ஏ. பி. எம். இத்ரீஸ் அவர்கள் எழுதிய பத்து நூல்களை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக மறைந்த எழுத்தாளர்களின் முழுத்தொகுப்பு நூல்களை செம்பதிப்பாகவும் புதிய எழுத்தாளர்களின் இலக்கியம், சமயம், பண்பாடு, வரலாறு மற்றும் ஆய்வு நூல்களையும் சிறுவர் மற்றும் திறன்விருத்தி நூல்களையும் வெளியிடுகிறது.
வெளியீடுகள்
தொகு2013
தொகு- நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கின்றது – அகமது ஃபைசல்
- அபாயகரமான வார்த்தை (மறு பதிப்பு) – ஏ. பி. எம். இத்ரீஸ்
- சிறுவர் உளவியல் (மறு பதிப்பு) – ஏ. பி. எம். இத்ரீஸ்
- ஒரு புரட்சிகரமான திட்டம் – வை. அஹ்மத்
- மிகுதியை எங்கு வாசிக்கலாம் – றியாஸ் குரானா
- குழந்தைகளும் வாழ்வும் (மறு பதிப்பு) – ஏ. பி. எம். இத்ரீஸ்
- ஹலால்: நடைமுறையும் சவால்களும் – ஏ. பி. எம். இத்ரீஸ்
- அப்போது நான் சினைத்த கொக்கிசான் மீன்கள் – சோலைக்கிளி
- ரிஸானா நபீக்: மனச்சாட்சியின் படுகொலை – ஏ. பி. எம். இத்ரீஸ்
- விலங்கிடப்பட்டிருந்த நாட்கள் – ஜிஃப்ரி ஹாஸன்
2012
தொகு- ஏ. ஜி. எம். ஸதக்கா: எழுத்தின் புன்னகை – பதிப்பு ஏ. பி. எம். இத்ரீஸ்
- இறுகியிருக்கும் வரிகளுக்குள் நீ திரவமென ஓடிக்கொண்டிருக்கிறாய் – அசரீரி
- இஸ்லாமிய பாரம்பரிய அரங்கு– அரங்கியல் ஆய்வு - ஏ. பி. எம். இத்ரீஸ்
- அரசியல் என்ன பால் – நாடகத் தொகுப்பு - ஏ. பி. எம். இத்ரீஸ்
- உடைபடும் மௌனம் – பண்பாட்டு உரையாடல் - ஏ. பி. எம். இத்ரீஸ்
- சோனக அரங்கு – அரங்கியல் உரையாடல் - ஏ. பி. எம். இத்ரீஸ்
- குடிமைச் சமூகத்தை வலுவூட்டல் – அரசியல் உரையாடல் - ஏ. பி. எம். இத்ரீஸ்
- மணம் வீசும் மலர்ச்சோலை – சிறுவர் பாடல்கள் - எச். எம். எம். ஹனீபா
- நண்பனைத் தேடி – சிறுவர் கதைகள் - ஏ. பி. எம். இத்ரீஸ்
2011
தொகு- குழந்தைகளும் வாழ்வும் – உளவியல் கட்டுரைகள் - ஏ. பி. எம். இத்ரீஸ்
- இஸ்லாமிய இலக்கியம்: புத்துயிர்ப்பும் புரிதல்களும் – இலக்கியக் கோட்பாடு - ஏ. பி. எம். இத்ரீஸ்
- சோனகத் தேசம்: மிகச் சுருக்கமான அறிமுகம் – வரலாறு - ஏ. பி. எம். இத்ரீஸ்
- புன்னகைக்கும் நபிகள் – நபிகள் வரலாறு - ஏ. பி. எம். இத்ரீஸ்
- இருபதாம் நூற்றாண்டு: சிந்தனைகள், ஆளுமைகள், நிகழ்வுகள் – வரலாறு - ஏ. பி. எம். இத்ரீஸ்
2006
தொகு- அபாயகரமான வார்த்தை – உளவியல் கட்டுரைகள் - ஏ. பி. எம். இத்ரீஸ்
- சிந்தனைகள் எவ்வாறு பிறக்கின்றன – திறன்விருத்தி - ஏ. பி. எம். இத்ரீஸ்
- பேச்சும் தலைமைத்துவமும் – திறன்விருத்தி - ஏ. பி. எம். இத்ரீஸ்
2005
தொகு- அதிகாரம் பற்றிய இரண்டு கண்ணோட்டங்கள் – ஏ. பி. எம். இத்ரீஸ்
- உரையாடல் தொடர்கிறது – நேர்காணல் தெகுப்பு - ஏ. பி. எம். இத்ரீஸ்
2004
தொகு- சீறாவின் இயங்கியல் – ஆய்வு - ஏ. பி. எம். இத்ரீஸ்
2002
தொகு- நவீனத்துவத்தின் தோல்வி – ரவூப் ஸெய்ன்
2000
தொகு- முக்காடு – வை. அஹ்மத் - பதிப்பு ஏ. பி. எம். இத்ரீஸ்
- தரிசனங்கள், நிலவின் நிழலில் – வை. அஹ்மத் - பதிப்பு ஏ. பி. எம். இத்ரீஸ்
1999
தொகு- காணாமல் போனவர்கள் – அஷ்ரஃப் சிஹாப்தீன்
1998
தொகு- போர்க்காலப் பாடல்கள் – ஏ. ஜி. எம். ஸதக்கா
- இஸ்லாத்தில் சிறுவர் உளவியல் – உளவியல் கட்டுரைகள் - ஏ. பி. எம். இத்ரீஸ்
வெளி இணைப்புகள்
தொகு- ஏபிஎம் மீடியா - காகம் பதிப்பகத்தின் இணையம்
- நூல்களின் பரணிடப்பட்டது 2012-10-16 at the வந்தவழி இயந்திரம் விபரம்