நிறுவன காங்கிரசு
(காங்கிரசு (ஸ்தாபன) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிறுவன காங்கிரசு, ஸ்தாபன காங்கிரசு, சிண்டிகேட் காங்கிரசு அல்லது காமராஜர் காங்கிரசு, காங்கிரசு (ஓ), (Indian National Congress (Organisation)) அழைக்கபெற்ற இக்கட்சியானது (1969-1977) காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்டு வந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிளவுபட்டு காமராஜர் தலைமையில் செயல்பட்டு வந்த கட்சியாகும்.[1]
கட்சி உருவான வரலாறு
தொகு- 1969ல் இந்திய தேசிய காங்கிரசில் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் காமராஜர், மொரார்ஜி தேசாய், எஸ். நிஜலிங்கப்பா ஆகிய காங்கிரசின் முன்னணி தலைவர்களால் உருவாக்கப்பட்ட “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டியும், வாரிசு அரசியலை எதிர்த்தும் பிரதமர் இந்திரா காந்தியை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர்.
- இதனால் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான காங்கிரஸ் என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.
கட்சி சந்தித்த தேர்தல்கள்
தொகு- 1971 பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக நிறுவன காங்கிரசு விளங்கியது. தேர்தலில் 51 இடங்களை வென்று இரண்டாம் இடத்தில் வந்தது. 1977 பொதுத் தேர்தலில் நிறுவன காங்கிரசு, பாரதிய ஜனசங்கம், பாரதிய லோக் தளம், சோசலிசக் கட்சி ஆகியவை இணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி வென்று காங்கிரசில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.
- இந்திய சுதந்திரத்திற்கு பின் 30 வருடங்களாக ஆண்டு வந்த காங்கிரசை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதான எதிர்க்கட்சியாக ஜனதா கட்சி வெற்றி பெற்று 1979 வரை ஆட்சியில் நீடித்தது.
- பின்பு நிறுவன காங்கிரஸ் ஜனதா கட்சி உடன் இணைந்து செயல்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ புதுக்கோட்டை, ed. (1975). எம் . ராதாகிருஷ்ண பிள்ளை முப்பதாண்டுப் பொதுப்பணி. எம் . ராதாகிருஷ்ண பிள்ளை பதிப்பகம்.
ஸ்தாபன காங்கிரசின் தலைவர் திரு காமராஜ் .