காங்கேயன் (அரசன்)

காங்கேயன் 12 ஆம் நூற்றாண்டில் வாழந்தவன். புலவர் ஒட்டக்கூத்தரைப் பேணியவன். இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக்கு உட்பட்டு ஆண்டுவந்த சிற்றரசன். இவனது தலைநகர் காஞ்சிபுரம். போர் மறவர்களாக விளங்கிய செங்குந்தர் மரபினன். புலவர் ஒட்டக்கூத்தர் இவனைப் போற்றிய நூல் காங்கேயன் நாலாயிரக் கோவை.[1][2]

மேற்கோள் தொகு

  1.  மாங்குயிலால் வில்லிதன் னம்பினாற் கம்ப வாரிதியால்
    ஓங்கியபூ மெல்லணை யொன்றினா னும்பரூர் மதியாற்
    றீங்குறுமே நல்லெழில் குன்றுமே கொம்புசீர் கெடுமே
    காங்கேயனே சொல்ல களங்கனே கம்பைக் காவலனே. (6)

    கம்பை நகரைத் தலைநகராகக் கொண்டு ஆளும் காங்கேயன்-தான் சொல் வல்ல அகளங்கன். அவனது ஊரில் மாங்குயில் பாடுவதாலும், வில்லோர் அம்பு-வெற்றி தருவதாலும், கம்பன்-பாடல் என்னும் வெள்ளம் பாய்வதாலும், அவனது ஓங்கிய பாடலாகிய பூ மெத்தையில் அனைவரும் உறங்குவதாலும், உம்பர் என்னும் தேவர் வாழும் உலகத்து நிலா கறை பட்டுத் தேய்ந்துபோகிறது. பிறை நிலாவின் கொம்பு சிறப்பு கெட்டுப்போய்விட்டது. கம்பனைப் போற்றியவர்களில் ஒருவன் 'காங்கேயன்' என்னும் வரலாற்றுச் செய்தி இதில் கூறப்பட்டுள்ளது.

  2. நூல் தனிப்பாடல் திரட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கேயன்_(அரசன்)&oldid=2715717" இலிருந்து மீள்விக்கப்பட்டது