காஞ்சிரப்புழா (மண்ணார்க்காடு)
காஞ்சிரப்புழா ஆறு (Kanjirappuzha (Mannarkkad)) என்பது இந்தியாவின் கேரளாவில் ஓடும் ஒரு ஆறாகும். மண்ணார்க்காட்டில் இருந்து 13 கி. மீ. தொலைவிலும், பாலக்காட்டில் இருந்து 43 கி. மீ. தொலைவிலும் காஞ்சிரப்புழா ஆற்றின் துவக்க இடம் அமைந்துள்ளது.[1] இது தூதப்புழா ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றாகும். தூதபுழா, தென்னிந்தியாவின் கேரளாவின் ஓடும் ஆறுகளில் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழா ஆற்றின் முக்கிய துணை ஆறாகும்.[2]
தூதத்தபுழா ஆற்றின் பிற துணை ஆறுகள்
தொகுகாஞ்சிரப்புழா அணை
தொகுதூதத்தபுழா ஆற்றின் கிளை நதியான காஞ்சிரபுழா ஆற்றின் மீது பாலக்காட்டில் காஞ்சிரபுழா அணைக் கட்டப்பட்டுள்ளது. இதன் அனைத்துப் பக்கங்களும் மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த ஆணை சுமார் 7,000 எக்டேர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டது. இந்த அணையானது 'வெற்றிலச்சோலா' எனப்படும் அடர்ந்த பசுமையான காடுகளால் சூழப்பட்டுள்ளது. அணையின் அடிப்பகுதியில் உள்ள பூங்கா ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது.[3]
மேலும் பார்க்கவும்
தொகு- பாரதப்புழா - முக்கிய ஆறு
- தூதப்புழா - பாரதப்புழா ஆற்றின் முக்கிய துணை ஆறு
மேற்கோள்கள்
தொகு- ↑ https://indiawris.gov.in/wiki/doku.php?id=kanhirapuzha_major_irrigation_project_ji02675
- ↑ https://www.keralatourism.org/photo-gallery/kanjirapuzha-dam-man-made-wonder/2436.
{{cite book}}
: Missing or empty|title=
(help) - ↑ "Kanjirapuzha Dam- A Man-Made Wonder". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-21.