காட்டுக்கொல்லை

காட்டுக்கொல்லை என்பது ஒரு சிற்றூர். தமிழ் நாடு மாநிலம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ளது. வடலூர் நகராட்சி யில் அடங்கியுள்ளது.

மக்கள் தொகு

இந்த ஊரில் சுமார் 75 குடும்பங்கள் உள்ளன.

அமைவிடம் தொகு

வடலூர் சத்திய ஞான சபைக்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காட்டுக்கொல்லை அமைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் புன்செய் நிலத்தை கொல்லை என அழைப்பது வழக்கம். ஒருகாலத்தில் காட்டுக்கு அருகில் இருந்த நிலத்தை காட்டுக்கொல்லை என அழைத்திருக்ககூடும். பிற்காலத்தில் அங்கு வீடுகட்டி குடியேறி மக்கள் வாழந்த போது அந்த ஊர் காட்டுகொல்லை என்றே பெயர் நிலைத்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. இந்த ஊரின் மேற்கில் சுமார் 100 மீட்டர் தொலைவு தூரம் வரை நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் வெட்டப்பட்டுள்ளது.

தொழில் தொகு

இங்கு வாழும் மக்கள் விவசாயத்தை மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். இவ்வூரின் நிலத்திற்கு அடியில் பழுப்பு நிலக்கரி இருப்பதை அறிந்த என். எல். சி நிறுவனம் அவர்களின் நிலத்தை கையகப்படுத்திக்கொண்டது[சான்று தேவை]. அதற்கு இழப்பீடும் கொடுத்தது. அதனால் விவசாயத்தை நம்பி வாழ்ந்த மக்கள் கூலி வேலை செய்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வூரின் தெற்கில் வடலூர் தொடர் வண்டி நிலையம் உள்ளது. ரயில் மூலம் நிலக்கரியைக் கொண்டு செல்ல நிலக்கரி சேமிப்பு கிடங்கு இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுக்கொல்லை&oldid=3751432" இலிருந்து மீள்விக்கப்பட்டது